புதன், 19 மார்ச், 2014

குஷ்புவையும் கனிமொழியையும் திமுக பிரசாரத்துக்கு அழைக்கிராங்கோ !

திமுக தலைமை தன்னை பிரசாரத்திற்கு அழைக்காததால் அப்செட் ஆகியிருந்ததாக கூறப்பட்ட நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்திலிரு்ந்து அவர் பிரசாரம் செய்வார் என்றும் தகவல்கள் வருகின்றன. குஷ்பு அப்செட்டாக உள்ளார், வேறு கட்சியில் சேர முனைகிறார் என்று எப்படி உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வந்ததோ, அதேபோல இந்த செய்தியும் வந்துள்ளது. வழக்கம்போல வெண்ணை திரண்டு வரும்போது தாளி உடையும் வாய்ப்பு அதிகரிப்பதை உணர்ந்த கலைஞர் பெரும்பாடு பட்டு குஷ்புவை சமதானப்படுதுள்ளதாக வெவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள் . குஷ்பு ஏப்ரல் முதல் வாரத்தில் பிரசாரம் தொடங்குவார் என்றும் அவருக்காக பிரசார வேன் தயாராகி வருவதாகவும் இந்த செய்தி கூறுகிறது.
இதேபோல கனிமொழியும் கூட பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இவரும் ஏப்ரல் மாதத்தில் பிரசாரம் செய்வாராம். ஒருவேளை அழகிரி தரப்பால் மதுரைக்கு அந்தப் பக்கம் பெரு்ம் பாதிப்பு வரலாமோ என்று திமுக தலைமை சந்தேகிப்பதால் ஸ்டாலினை மட்டும் நம்பாமல், குஷ்பு, கனிமொழி உள்ளிட்டவர்களையும் களம் இறக்கி தானும் களத்தில் குதிக்க திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக