வெள்ளி, 14 மார்ச், 2014

அழகிரி to வைகோ : விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராகிறீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள்”


“நீங்க டில்லிக்கு போக டிக்கெட் எடுங்க..  நாங்க விருதுநகர்ல பாத்துக்கிறோம்”
“நீங்க டில்லிக்கு போக டிக்கெட் எடுங்க.. நாங்க விருதுநகர்ல பாத்துக்கிறோம்”
மதுரை விமான நிலையத்தில் ‘எதேச்சையாக’ சந்தித்துக்கொண்ட வைகோ, மு.க. அழகிரி இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசியதாக வெளியான தகவல், தி.மு.க.வில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அழகிரி மீது கடுங் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
“வைகோவின் தூண்டுதலின் பேரில் விடுதலைப்புலிகள் என்னைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர்” என குற்றம்சாட்டிய கருணாநிதி, இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 1993-ம் ஆண்டு வைகோவை கட்சியிலிருந்து நீக்கினார். அதேபோல சமீபத்தில், “சில மாதங்களின்பின் ஸ்டாலின் உயிரோடு இருக்க மாட்டார்” என அழகிரி கூறியதாகக் கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
“என் மீதான குற்றச்சாட்டு அபாண்டம்” என 1993-ல் வைகோ கூறினார். 2014-ல் அழகிரியும் அதே பதிலைக் கூறினார்.
இந்நிலையில், (கலைஞர் கூற்றுப்படி) தந்தையை கொல்லத் திட்டமிட்ட வைகோவும், தனையனை கொல்ல திட்டமிட்ட அழகிரியும், மதுரை விமான நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்துக்கொண்டு சுமார் அரை மணி நேரம் மனம் விட்டுப் பேசியதாகக் கூறப்படும் விஷயத்தில், இப்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

“சிலரின் தூண்டுதலின் பேரில் உங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்திதான் கட்சியிலிருந்து உங்களை நீக்கினார்கள். என்மீதும் அதே போன்றதொரு குற்றச்சாட்டைத்தான் கூறித்தான் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்” என அழகிரி கூறியபோது, “உண்மை ஒரு போதும் தோற்காது” என வைகோ ஆறுதல் கூறியதாகக் தெரிகிறது.
அதன்பின் அழகிரி, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராகிறீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள்” என கூறியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பில் அழகிரி கூறிய வார்த்தைகளை அடுத்து, விருதுநகர் தொகுதியில் தனது ஆதரவாளர்கள் வைகோவை ஆதரிப்பார்கள் என்பதை அழகிரி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மறைமுகமாக கூறிவிட்டார் என்று இப்போது சென்னையில் யாரோ ‘கொளுத்திப் போட்டுவிட்டதால்’ தற்போது தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
வைகோ, அழகிரி இருவரும் சந்தித்துப் பேசிய தகவல் கருணாநிதி, ஸ்டாலினுக்கு தெரிய வரவே, இருவரும் அழகிரி மீது கடுங் கோபத்தில் இருப்பதாக கட்சியில் பேசிக்கொள்கிறார்கள்.
என்னங்க இது… அழகிரி ஆதரவாளர்களும் யாருக்காவது ஓட்டு போடதானே வேண்டும்… கிட்டத்தட்ட ஒரே குற்றச்சாட்டை அழகிரியுடன் ஷேர் பண்ணியுள்ள வைகோவுக்கு போட்டுவிட்டு போகட்டும viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக