புதன், 5 மார்ச், 2014

Gujarat கெஜ்ரிவால் கைது : மோடி கூற்றின் உண்மையை கண்டறிய குஜராத் சென்ற கெஜ்ரிவால்

அகமதாபாத்: குஜராத்தை முன்னோடி மாநிலமாக ஆக்கிவிட்டதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி கூறி வருவது உண்மையா என்பதை பார்க்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றார். சென்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார். அகமதாபாத்தை அடைந்த கெஜ்ரிவால் தனது சுற்றுப்பயணத்தின் இறுதிநாள் அன்று பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். ஆம் ஆத்மி கட்சி துவங்கிய பிறகு முதன் முறையாக குஜராத் வந்துள்ள கெஜ்ரிவால் மாநிலம் முழுக்க சுற்றிப் பார்க்க உள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவால் மெஹ்சனா மாவட்டம் பெசராஜியில் இருந்து ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை மீறிச் சென்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கெஜ்ரிவாலின் பயணம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் மனிஷ் சிசோடியா கூறுகையில், குஜராத் முன்னேற்றம் பற்றி கேள்விப்பட்டோம். அது உண்மையா என்பதை கண்டறிய இங்கு வந்துள்ளோம். அது பொய்யாக இருந்தால் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக