வியாழன், 13 மார்ச், 2014

டெபாசிட் கூட தேறாத நிலையில் ஓடி ஒழிக்கும் காங் தலைகள் Ex MP etc

தமிழகத்தில், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தை, தேர்தலுக்கு தேர்தல் கூவி விட்டு, தேர்தல் வந்ததும், அந்த கோஷத்தை காற்றில் பறக்கவிட்டு, திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்த, தமிழக காங்., இந்த லோக்சபா தேர்தலை, மாறுபட்ட கோணத்தில் சந்திக்கிறது. அதாவது, காங்கிரசை கூட்டணியிலிருந்து, தி.மு.க., கழற்றி விட்டது. அதேநேரத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, தமிழர்கள் நலன்சார்ந்த விஷயங்களுக்கு, காங்., மேலிடம் முக்கியத்துவம் அளிக்காததால், அக்கட்சியுடன் கூட்டணி சேர, அ.தி.மு.க.,வும் விரும்பவில்லை.   காங்கிரஸ் கட்சி எப்படி தனித்து விடப்பட்டதோ அதே மாதிரிதான் அதிமுக வையும் எந்த கட்சியும் சீண்ட வில்லை. ஆனா அத பத்தி யாரும் பேசறது இல்ல,தாபா கோஷ்டி என்பதை தனி கட்சிகள் வரிசையில் சேராது ! 
கூட்டணிக்கு வளைக்க..
அதனால், விஜயகாந்தின் தே.மு.தி.க.,வை, கூட்டணிக்கு வளைக்க, காங்., தலைவர்கள் முற்பட்டனர். அந்த முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது.இருந்தாலும், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., கூட்டணி அமையும். அந்த கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என, ஆசைப்பட்டு, லோக்சபா தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர்.ஆனால், எந்தக் கட்சியும் அணி சேராமல், காங்., தனித்துப் போட்டியிடும் நிலைமையில் உள்ளதால், விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் எல்லாம், தற்போது, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து, விலகத் துவங்கி உள்ளனர். இதில் முந்திக் கொண்டவர்கள், மத்திய அமைச்சர், வாசன் மற்றும் முன்னாள் அமைச்சர், ஜெயந்தி நடராஜன்.

இவர்களை போல, கடந்த 10 ஆண்டு கால, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த, எம்.பி., பதவி சுகத்தை அனுபவித்த, தமிழக காங்., மூத்த தலைவர்கள் பலரும், தேர்தலில் போட்டியிலிருந்து விலக தீர்மானித்து உள்ளனர். அதற்கு சாக்குப் போக்காக, தங்களின் அப்பாவி ஆதரவாளர்களை நிறுத்தும்படி, பரிந்துரை செய்து வருகின்றனர்.அவர்களின் இந்தச் செயல், காங்., தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:காங்., தனித்துப் போட்டியிடுவதால், 'டெபாசிட்' வாங்குவது, பெரும் கஷ்டம் என்பதால், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மற்றும் சில கோஷ்டி தலைவர்கள் போட்டியிட விரும்பவில்லை.


களமிறக்க வேண்டும்



அதேபோல், முந்தைய இரண்டு தேர்தல்களில், நல்ல கூட்டணி அமைந்த போது, போட்டி போட்டு, 'சீட்' வாங்கியவர்கள் எல்லாம், இந்த முறை தோல்வி நிச்சயம் என, நினைத்து, பணம் செலவழிக்கவும், தேர்தல் களம் இறங்கவும் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக, அப்பாவிகள் சிலரை களமிறக்கி, அவர்களின் பணத்தை கரைக்க, சதித் திட்டம் தீட்டுகின்றனர்.இப்படிப்பட்ட நபர்களின் செயலை, காங்., மேலிடம் அனுமதிக்கக் கூடாது. தற்போதைய எம்.பி.,க்கள் அனைவரையும், மீண்டும் தேர்தல் களத்தில் இறக்க வேண்டும். அதேபோல், காங்கிரசால், ஆதாயம் பெற்றவர்களையும் களமிறக்க வேண்டும். அப்போது தான், தமிழகத்தில், காங்., வலுபெறும். இதுதொடர்பாக, கட்சியின் துணைத் தலைவர், ராகுலுக்கு, பேக்ஸ் மூலம் கடிதங்கள் அனுப்பி, கோரிக்கைகள் விடுத்து வருகிறோம்.இவ்வாறு, காங்., தொண்டர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக