சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, மகள் கனிமொழி
ஆகியோரை, சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில், அழகிரி நேற்று காலை
சந்தித்தார். அவர்களுடன், ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, 'எனக்கும், என்
ஆதரவாளர்களுக்கும் கட்சியில் கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடிகளுக்கு
முடிவு கட்ட வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு, நீங்கள்
இருவரும் ஆதரவு தர வேண்டும்' என, அழகிரி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு,
'உன் வேண்டுகோளை, கருணாநிதியிடம் தெரிவிக்கிறேன். அதுவரை, அமைதியாகவும்,
பொறுமையாகவும் இரு' என, ராஜாத்தி, அழகிரிக்கு யோசனை தெரிவித்ததாகவும்,
தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட அழகிரி, நேற்று முன்தினம், கட்சித் தலைவரும், தந்தையுமான கருணாநிதி, சிந்தாதிரிப்பேட்டையில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்த நேரத்தில், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, தன் தாயார் தயாளுவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார், அப்போது, தயாளு, 'நீ எதற்கும் கவலைப்படாதே. ஜாக்கிரதையாக இரு. வெளுத்தது எல்லாம் பால் என, எல்லோரையும் நம்பாதே. அப்பாவிடம் பேசி, உன் பிரச்னையை நான் சரி செய்கிறேன்' என, ஆறுதல் கூறியுள்ளார். அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளால் சமாதானம் அடைந்த அழகிரி, நேற்று முன்தினம் இரவே, மதுரைக்கு செல்லும் முடிவை ரத்து செய்து, சென்னையில் தங்கினார். வழக்கமாக, ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கும் அவர், நேற்று முன்தினம் இரவு, போயஸ் தோட்டத்தில் உள்ள, மகன் தயாநிதி வீட்டில் தங்கினார்.
இந்நிலையில், நேற்று காலை, 8:15 மணிக்கு, திடீரென சி.ஐ.டி., காலனியில் உள்ள, கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி வசிக்கும் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை வரவேற்று உபசரித்த, ராஜாத்தியும், அவரின் மகள் கனிமொழியும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக, குடும்ப விஷயங்களையும், அழகிரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், மனம் விட்டுப் பேசினர். அப்போது, கட்சி தலைமை கூறும், குற்றச்சாட்டுக்களுக்கு, தன் தரப்பு நியாயங்களை விவரித்துள்ளார்.
மூவரும் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

அழகிரி:
எனக்கு,
10 மாவட்ட செயலர்களின் ஆதரவு உள்ளது. கட்சியில் உள்ள ஒன்றிய செயலர்களில்,
30 சதவீதம் பேர் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் நலனுக்காகவும், என்னை
நம்பி இருக்கிற கட்சிக்காரர்களுக்காகவும், நான் மன்னிப்பு கேட்க தயாராக
இருக்கிறேன். எனக்கு பதவி வேண்டும். என்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற
கோரிக்கையை, நான் தலைவரிடம் வைக்க விரும்பவில்லை. கனிமொழி
ஆதரவாளர்களுக்கும், தேர்தலில் போட்டியிட ஒரு, 'சீட்' கூட
கொடுக்கப்படவில்லை. நீங்கள் எல்லாம் கட்சிக்காக உழைக்கவில்லையா? 2ஜி'
விவகாரத்தில், திகார் சிறையில், கனிமொழி இருந்தாரே, அது தியாகம் இல்லையா?
ஸ்டாலின் மட்டும் தான் கட்சிக்கு உழைத்தாரா? ஸ்டாலினுக்கு, பொன்முடியும்,
வேலுவும் பெரிதாக, 'ஜால்ரா' அடிக்கின்றனர். அவர்கள் எதற்காக அப்படி
செய்கின்றனர் என்பதும், அவர்களின் ரகசியங்களும் எனக்குத் தெரியும். அவர்கள்
இருவரும், ஏதோ கோட்டையை பிடித்தது போல நினைக்கின்றனர். அது,
மனக்கோட்டையாகி விடும்.
கனிமொழி:
உங்கள்
தரப்பு நியாயத்தை, நீங்கள் தெரிவித்து விட்டீர்கள். ஆனால், நான் ராஜ்யசபா
எம்.பி.,யாக தேர்வாக, புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சிகளின்
ஓட்டுக்கள் எனக்கு உதவின. அதனால், புதிய தமிழகம் தலைவர், கிருஷ்ணசாமியை
தோற்கடிப்பேன் என, நீங்கள் பேட்டி அளித்தது சரியல்ல. அவர், நம் கூட்டணி
கட்சியின் தலைவர். உங்களை விட வயது குறைந்த நான், இப்படி சொல்கிறேன் என்று,
நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். நமக்கு உதவியவருக்கு, நாமும் சரியான
நேரத்தில் உதவுவதே நமக்கு நல்லது. கடந்த, 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில்,
கூட்டணி அலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அதே மாதிரியான சூழ்நிலை,
இந்த தேர்தலில் வந்து விடாது. அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுக்கள் நம்
கட்சிக்கு கிடைக்க வேண்டும். கட்சியில் நிலவும் குழப்பத்தினால், அந்த
ஓட்டுக்கள், தே.மு.தி.க.,விற்கு சென்று விடக் கூடாது. மேலும், 2016 சட்டசபை
தேர்தலிலும், நம் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். பிரச்னைகளை
சுமுகமான முறையில் தீர்க்க, நான் உதவுகிறேன், அப்பாவிடம் பேசுகிறேன்.
தலைவருக்கும், கட்சிக்கும் தான் ஓட்டுக்கள் உண்டு. நாம் எல்லோரும் அவரின்
நிழலில் தான் இருக்கிறோம். எனவே, அவருடைய மனம் புண்படும்படி நடந்து
கொள்ளாதீர்கள்.
ராஜாத்தி:
தலைவரின்
முடிவுக்கு எதிராக, எந்த விமர்சனமும் பண்ணாதே; வாயை மூடி அமைதியாக இரு.
கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதே. உன்னுடைய பிரச்னைகளை
பற்றி, நான் அப்பாவிடம் பேசுகிறேன்; எல்லாம் சரியாகி விடும். இவ்வாறு,
அவர்கள் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரி dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக