வியாழன், 13 மார்ச், 2014

Delhi மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்: 4 பேருக்க தூக்கு உறுதி !

டெல்லி: டெல்லியில் 2012 டிசம்பர் மாதத்தில் மருத்துவ மாணவியை பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் அடங்கிய கும்பலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டணை விதித்து தீர்பளித்துள்ளது. பாலியல் பலாத்காரத்தில் சம்பந்தப்பட்ட முகேஷ், வினய் ஷர்மா, பவான், மற்றும் அக்ஷய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்த டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.  2012 டிசம்பர் 16ல் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம்
2013 செப்டம்பர் 13ல் 4 பேருக்கு மரணதண்டனையை விதித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஏற்கனவே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்  dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக