புதன், 5 மார்ச், 2014

Coimbatore Rape இரட்டை சகோதரர்களுக்கு ஆண்மை பரிசோதனை



கோவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.
கல்லூரி மாணவி கற்பழிப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் அகில் (20), அதுல் (20). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இதற்கிடையே அதேக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவியை கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தனது வீட்டுக்கு அகில் அழைத்துச்சென்றார்.
பின்னர் அந்த மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே வீட்டுக்கு வந்த அதுலும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த மாணவி அதுலை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வெளியேறினார்.

இரட்டை சகோதரர்கள் கைது
இதைதொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரட்டை சகோதரர்களான அகில், அதுல் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்தியசிறையில் அடைத்தனர்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து துபாயில் வசித்து வரும் அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் கோவை விரைந்து வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதனால் அவருக்கு சிகிச்சை கொடுப்பதற்காக அந்த மாணவியின் பெற்றோர் அவரை துபாய்க்கு அழைத்து சென்றனர்.
ஆண்மை பரிசோதனை
இதற்கிடையே சிறையில் இருக்கும் இரட்டை சகோதரர்கள் இருவருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கோர்ட்டில் அனுமதி பெற்று, அவர்கள் இருவரையும் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அதுல், அகில் ஆகியோருக்கு டாக்டர்கள் ஆண்மை பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிந்த பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு தீவிர சிகிச்சை
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘குற்றவாளிகள் இருவருக்கும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 2 நாட்களில் அறிக்கை வெளியாகும். கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு பேச்சு சரியாக வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் அந்த மாணவியை சிகிச்சைக்காக துபாய் அழைத்துச்சென்று உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது மட்டுமே அவர் கோர்ட்டுக்கு வந்தால் போதும் என்பதால், மாணவியை துபாய் அழைத்துச்செல்ல அனுமதி வழங்கினோம்’ என்றனர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக