வெள்ளி, 7 மார்ச், 2014

தொல்.திருமாவளவன் : வருத்தம் இருந்தாலும் மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது!

தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி’யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தொல்.திருமாவளவன் பேட்டி
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது?
பதில்: நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம். அதில் 3 தொகுதிகளை எதிர்பார்த்தோம். கடைசியாகவும், இறுதியாகவும் 2 தொகுதிகளை கேட்டு வற்புறுத்தினோம். எனினும் சிதம்பரம் என்ற ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதில் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்கிறோம். மேலும் பலமுனைபோட்டி இருப்பதால் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும், இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர இடதுசாரி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கிறேன். விழுப்புரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று பொன்முடி நச்சரிதாராமே ?அதனாலேதான் இரண்டு ஒண்ணாச்சு என்று ஒரு கிசு கிசு! அரசியலில் கிசு கிசு இருக்க கூடாதா என்ன ?
கேள்வி: நீங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் இருக்கிறதா?
பதில்: தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து உள்ளோம். இந்த உறவின் அடிப்படையில் உரிமையோடு, 5 தொகுதிகளை கேட்டோம். தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதையடுத்து, வருத்தம் இருந்தாலும் இந்தியாவை காப்பாற்றவும், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையை காக்கவும் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்கிறோம்.

கேள்வி: 15 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் கொடுத்தது வருத்தம் அளிக்கவில்லையா?
பதில்: அந்த வருத்தம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை.
கேள்வி: தற்போது உள்ள தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலை போன்று மாபெரும் வெற்றி பெறுவோம். அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் கட்சியாக தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ திகழும். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக