செவ்வாய், 18 மார்ச், 2014

வைகோவும் தன்னிச்சையாக வேட்பாளர் அறிமுகம் ? இன்று மாலை தெரிந்துவிடும்.

வைகோ இன்று முடிவு ஏடுக்கலாம்! “நாமும் நம்ம தொகுதிகளை அறிவித்து விடலாமா?” "  பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில்,  அதிலுள்ள கட்சிகள், தத்தமது இஷ்டத்துக்கு தமக்கான தொகுதிகளையும், அவற்றின் வேட்பாளர்களையும் அறிவித்துக்கொண்டே போகின்றனர். இதனால் கடும் பாதிப்பை சந்தித்திருப்பது ம.தி.மு.க. தான். காரணம் இந்த கட்சிக்கு இன்னும் இட ஒதுக்கீடு முறையாக அறிவிக்கப்படாத காரணத்தினால், எவ்வித தேர்தல் பணியும் தொடங்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
மற்ற கட்சிகள்போல அடாவடியாக களத்தில் இறங்கலாம் என்றாலோ, வைகோ, அரசியல் நாகரீகம் பார்ப்பவர். அடாவடி அரசியலில் நம்பிக்கையற்றவர். அடடே இவரு அரசியல் நாகரீகம் பார்ப்பவராமே ? எந்த பிடியாவில கண்டு பிடிச்சீங்க ?

மோடியை பிரதமராக்கிட வேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான தமிழக கூட்டணியில் முதல் ஆளாக சேர்ந்து கொண்டது  ம.தி.மு.க.தான். ஆனால், இவர்கள்தான், எந்த தொகுதியிலும் இறங்கி வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் ம.தி.மு.க.  உயர்நிலை கூட்டத்தை கட்சியின் பொதுசெயலர் வைகோ இன்று தொடக்கியுள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம்,  தொடர்ந்து மாலை வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் , நமது தொகுதிக்கான வேட்பாளரை நாமே அறிவித்து விடலாமா அல்லது, முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாமா என்றும் , ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
வைகோ என்ன முடிவு எடுப்பார் என்பது, இன்று மாலை தெரிந்துவிடும்.
viruvirupu.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக