புதன், 5 மார்ச், 2014

ஆசிட்' வீச்சு லக்ஷ்மிக்கு சர்வதேச வீரப் பெண்மணி விருது !அதற்கு எதிராக போராடியவர்


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதற்கு எதிராக போராடி, இந்தியாவில் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுபாடுகளை விதிக்க காரணமாக இருந்த தில்லியைச் சேர்ந்த இளம் பெண் லக்ஷ்மி, அமெரிக்காவின் சர்வதேச வீரப் பெண்மணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, இந்த விருதை லக்ஷ்மிக்கு வழங்க உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில்லை.
ஆசிட்டால் பாதிக்கப்பட்ட தங்களது உருவத்தை மறைக்கவே முயற்சி மேற்கொள்வர். அவர்கள் உயர் கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது ஆகியவற்றைத் தவிர்ப்பதும் வழக்கம்.
ஆனால், லக்ஷ்மி அதுபோன்ற பாதைகளை தேர்ந்தெடுக்காமல் தொலைக்காட்சிகளில் தோன்றி ஆசிட்டுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி, 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்துகளை பெற்றார்.

தனது கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, ஆசிட் விற்பனைக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுத்துள்ளார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நிவாரண நிதி மற்றும் மறுவாழ்வு கிடைக்கவும், ஆசிட் வீச்சு குற்றங்களை ஒடுக்கவும் அவர் தீவிரமாகப் போராடியுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டில் லக்ஷ்மிக்கு 16 வயது நடந்தபோது, அவர் காதலிக்க மறுத்த காரணத்தால் அவரது நண்பரின் சகோதரர் ஆசிட் வீசினார். இதில் லக்ஷ்மியின் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக