ஞாயிறு, 23 மார்ச், 2014

எப்படி ஜெயிப்பே நீ.. டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மு.க.அழகிரி அதிரடி சவால்!

ராஜபாளையம்: உனது சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துள்ளேன். தேர்தலுக்குப் பின் பார். எப்படி பாதிப்பு என்று தெரியும். நீ 3வது இடம் பெற்றாலே இது பெரிய விஷயம். எனது சொந்தங்கள் அங்கு நிறைய உள்ளனர். நிச்சயமாக உனக்கு பாடம் புகட்டுவேன் என்று தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மு.க.அழகிரி பகிரங்கமாக சவால் விட்டுள்ளார். இன்று காலையில் அழகிரியை அவரது மதுரை வீட்டில் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் ராஜபாளையம் புறப்பட்டு வந்தார் அழகிரி. அங்கு நடந்த காது குத்து விழாவில் கலந்து கொண்டார் அழகிரி. அழகிரி வந்ததால் அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். நிகழ்ச்சியில் படு உற்சாகத்தோடு காணப்பட்ட அழகிரி, பின்னர் பேசியபோது பேச்சில் அனல் பறந்தது.
திமுகவிலிருந்து மு.க.அழகிரி விலக்கப்பட்டதால் ஏதாவது பாதிப்பு இருக்குமா என தென்காசி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்ன பதில் கூறியிருக்க வேண்டும்? இது உட்கட்சி பிரச்னை. இதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லையெனக் கூறியிருந்தால் அவர் உண்மையிலேயே மதிக்கத்தக்கவர்.
ஆனால், திமுவிலிருந்து மு.க.அழகிரியை விலக்கியதால் திமுகவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை, எனக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். எப்படி பாதிப்பில்லாமல் போய்விடும்.

உனது சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துள்ளேன். தேர்தலுக்குப் பின் பார். எப்படி பாதிப்பு என்று தெரியும்.
நீ 3வது இடம் பெற்றாலே இது பெரிய விஷயம். எனது சொந்தங்கள் அங்கு நிறைய உள்ளனர். நிச்சயமாக உனக்கு பாடம் புகட்டுவேன்
மதுரையில் வைகோ என்னைச் சந்தித்தார். நாங்கள் பழைய விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினோம். பேசி முடித்துப் புறப்படும்போது எனக்கு ஆதரவு கொடுங்கள் என வைகோ கேட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கேட்டனர். ஆனால், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து கூறுவதாகத் தெரிவித்தேன். முதலில் கட்சியையும் தலைவரையும் காக்க வேண்டும். பின்னர் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்றார் அழகிரி. அழகிரியின் இந்த அனல் பறந்த பேச்சாலும், டாக்டர் கிருஷ்ணசாமியை அவர் சாதி வாக்குகளைச் சொல்லி ஜெயிச்சிருவியா என்று சவால் விட்டுப் பேசியதும் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.
இரு நாள்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு அறிக்கை பார்த்தேன். மதுரை வரும் திமுக தலைவர் எனது வீட்டுக்கு வந்தால் தலைவரையே கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள்போல.
tamil.oneindia.in   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக