திங்கள், 24 மார்ச், 2014

அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் நந்தகோபாலை திருப்பி அனுப்பிய மக்கள்

திருவாரூர்:முத்துப்பேட்டை அருகே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ள அப்பகுதி மக்கள், அ.தி.மு.க., வேட்பாளரை, ஓட்டு சேகரிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.மேலும், ஓட்டு கேட்டு வரும் எந்தக் கட்சியினரையும், ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என, கிராம மக்கள் கூறினர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு ஊராட்சியில், மேலக்காடு, மேல தொண்டியக்காடு உள்ளிட்ட, பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.  உங்கள் ஓட்டு இல்லாமல், நாங்கள் வெற்றி பெறுவோம்' எனக் கூறிய அ.தி.மு.க.,வினர்
  அதான் அவர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய ஆதரவு இருக்கே அது போதாதா?இங்கு நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, அப்பகுதி மக்கள், பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்க வில்லை.அதனால், கடந்த நவ., மாதம், ஊராட்சித் தலைவர் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, அதிகாரிகள் சமரசம் செய்தனர். ஆனால், இன்னும் இப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.இதனால், லோக்சபா தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்து, மாநில அரசை விமர்சித்து, பேனர் வைத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., வேட்பாளர், டாக்டர் கோபால் ஓட்டு சேகரிக்க, கட்சி பிரமுகர்களுடன் அங்கு சென்றார். அப்பகுதி மக்கள், அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தனர்.மாவட்ட ஊராட்சித் தலைவி ஜெயலட்சுமி, சேர்மன் நடராஜன் உட்பட, பலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.சேர்மன் நடராஜன், உங்கள் பகுதிக்கு பல நடத்திட்டங்களை செய்துள்ளேன். குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்கிறேன் என்றார்.அப்பகுதியினர் பிடிவாதமாக இருந்ததால், 'உங்கள் ஓட்டு இல்லாமல், நாங்கள் வெற்றி பெறுவோம்' எனக் கூறிய அ.தி.மு.க.,வினர், அங்கு ஓட்டு சேகரிக்க முடியாமல் புறப்பட்டனர்.
dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக