வியாழன், 6 மார்ச், 2014

கெஜ்ரிவாலை விட அதிக தியாகங்களை செய்தவர் மம்தா:அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மூத்த சமூகசேவகர் அன்னா ஹசாரே பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசுகையில் "எளிமையான ஆடைமற்றும் ரப்பர் செருப்புகள் அணியும் ஒரு முதல்வரை காண்பது மிகவும் அரிது.அந்த வகையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று வரை தனக்கு வழங்கப்பட்ட அரசாங்க இல்லத்தையோ அரசு வாகனத்தையோ பயன்படுத்தாமல் எளிமையாக இருந்து வருகிறார்.எனவே ஆம்ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட தன் அரசியல் வாழ்க்கையில் அதிக தியாகங்கள் செய்தவர் மம்தா பானர்ஜியே ஆவார்.மேலும் அவர் தனது மாநிலத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.எனவே மம்தா பிரதமரானால் நம் நாட்டிற்கு வளமான எதிர்காலம் உண்டு.அதே சமயத்தில் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போன்றவர்கள் பிரதமரானால் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக அமையாது” என்றும் தெரிவித்தார்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக