திங்கள், 24 மார்ச், 2014

மலேசிய விமானம் கடலில் முழ்கி விபத்துக்குள்ளானது உறுதி : நஜிப் ரசாக்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் இந்துமாக் கடலில் முழ்கி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது என்று கோலாலம்பூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் நஜிப் ரசாக் தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்த 239பேரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக நஜிப் தெரிவித்தார். கோலாலம்பூரில் இருந்து மார்ச் 8-ம் தேதி விமானம் பெய்ஜிங் சென்ற போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு மேற்கே கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று விமானத்துறை நிபுணர்களை மேற்கொள் காட்டி மலேசிய பிரதமர் நஜீப் ராசாக் தெரிவித்துள்ளார்.விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் உயிர்பிழைத்தாக  தகவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நஜீப் தகவல் அளித்துள்ளார். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக