சனி, 15 மார்ச், 2014

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகத்தினர் சிறையில் தள்ளப்படுவார்கள்’ அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகத்தினர் சிறையில் தள்ளப்படுவார்கள்’’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ர்ச்சை பேச்சு
மராட்டிய மாநிலம் நாக்பூரில், கடந்த 13–ந்தேதி தேர்தல் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் அவர் பேசிய பேச்சு, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த ஓராண்டு காலமாக மோடி இங்கே இருக்கிறார்; மோடி அங்கே இருக்கிறார் என்று நமக்கு சொல்லப்படுகிறது. மோடியும் அதையே சொல்லி வருகிறார். சில டி.வி. செய்தி சேனல்கள் இன்னும் ஒருபடி மேலே போய், ராமராஜ்யம் வந்து விட்டது. ஊழல் மறைந்து விட்டது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றன.
மோடியை தூக்கிவைத்து ஆடும் ஊடகங்கள் மோடியும் அமித் ஷாவும் இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தை ஏன் அமுக்கின? கேஜ்ரிவால் கேட்ட 17 கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாத் ரூமுக்குள் ஒளிந்துகொண்ட மோடியை வெளிப்படுத்த ஏன் தயங்கின? இன்றுவரை இயற்கை வாயு விலை நிர்ணயம் பற்றி மோடி வாய் திறந்ததுண்டா? ஏன் ஊடகங்கள் அதை வெளிப்படுத்தாமல் மவுனி யாக உள்ளன? இன்னமும், தான் போட்டியிடும் தொகுதியை கூட அறிவிக்காமல் பயந்து பம்மி கொண்டிருக்கும் மோடியை பற்றி இந்த ஊடகங்கள் ஏதேனும் செய்திகள் சொன்னதுண்டா?

இந்திரன் சந்திரன் என்று தூக்கி பிடித்தவர்கள் எல்லாம், இப்போது ரவுடி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பொறம்போக்கு, பன்னாடை என்றெல்லாம் வர்ணித்து செய்திகள் எழுதினால் யாருக்குத்தான் கோபம் வராது. 

டி.வி. சேனல்களுக்கு பணம்
அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? ஏனெனில், டி.வி. சேனல்களுக்கு பெருமளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மோடியின் செல்வாக்கைப் பெருக்குவதற்காக பணம் தரப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதை எந்தவொரு செய்தி சேனலும் காட்டவில்லை. விவசாயிகள் தங்கள் நிலத்தை ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுத்துள்ளனர். இதையும் எந்தவொரு செய்தி சேனலும் காட்டவில்லை.
ஆட்சிக்கு வந்தால் சிறை
ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த முறை விலை போய்விட்டன. இது மிகப்பெரிய சதி. இது மிகப்பெரிய அரசியல் சதி. நமது கட்சி ஆட்சிக்கு வந்தால், இதுகுறித்து விசாரணை நடத்துவோம். ஊடகத்தினருடன் அனைவரையும் சிறையில் தள்ளுவோம்.
இவ்வாறு அதில் கெஜ்ரிவால் பேசினார். இதற்கு ஆதாரமான வீடியோவும் வெளியாகி உள்ளது.
தலைவர்கள் கண்டனம்
சர்ச்சைக்குரிய இந்தப்பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கருத்து தெரிவிக்கையில், ‘‘ஒட்டுமொத்த ஊடகமும் மோடிக்கு விலை போய் விட்டன என்று கெஜ்ரிவால் நாக்பூரில் பேசியதைக்கண்டு திகைத்துப் போனேன். அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தி அனைத்து ஊடகத்தினரையும் சிறையில் தள்ளுவோம் என்றும் கூறி இருக்கிறார். இது சர்வாதிகாரப்போக்கு ஆகும். அவர் காங்கிரசுக்காக வேலை செய்து வருகிறார். அதன் மூலம் அவர் அரசியல் ஆதாயம் அடைய விரும்புகிறார். அவரது மனப்போக்கு இப்போது வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் (கெஜ்ரிவால் கட்சியினர்) நகர்ப்புற நக்சலைட்டுகள்’’ என கூறினார்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘ஊடகம் தான் அவரை ஒரே நாளில் ஹீரோ ஆக்கியது. இப்போதோ அதே ஊடகத்தை அவர் சிறைக்கு அனுப்புவதாகக் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒரு அமைப்பை என்ன செய்வது என்பதை ஊடகம் தான் தீர்மானிக்க வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ், கம்யூ. கருத்து
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான கபில் சிபலும் கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கருத்து கூறுகையில், ‘‘ஊடகம் சட்டப்படி தகுதி வாய்ந்த ஒன்று. அதை அவரால் ஒன்றும் செய்ய இயலாது’’ என்றார்.
இந்திய கம்யூ. செயலாளர் டி.ராஜா, ‘‘கெஜ்ரிவாலின் சூழ்ச்சிகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நீண்டகாலமாக நாங்கள் கூறி வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் கெஜ்ரிவாலை முழுமையாக ஆதரித்து வருகின்றன. அப்படிப்பட்ட விஷயங்களைத்தான் அவர் பேசி வருகிறார்’’ என கூறினார்.
மறுத்தார் கெஜ்ரிவால்
இப்படி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கெஜ்ரிவால் தனது பேச்சை இன்று மறுத்தார். மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், ‘‘நான் அப்படிப் பேசவே இல்லை. நான் எப்படி உங்களை (ஊடகம்) அப்படி நிலைகுலையச்செய்யும்படி பேசுவேன்?’’ என கூறினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக