ஞாயிறு, 16 மார்ச், 2014

வித்யா பாலன் : எனக்கு அழகில்லை நடிக்கத் தெரியவில்லை ராசியில்லாத நடிகை ’ என்று கூறி ஒதுக்கினார்கள்.

வித்யா பாலன் இந்தி திரை உலகை ஆட்டிப்படைக்கும் தென்னகத்து தேசிய விருதின் ஆச்சரியத்திற்குள் மூழ்கியிருந்தீர்கள். அதற்குள் பத்மஸ்ரீ கிடைத்துவிட்டது. எப்படி இருக்கிறது இந்த அனுபவம்?
நடிகை.  இவரது காதல் திருமணம், இவரது கதாநாயகி வாய்ப்புக்கு தடையாக இல்லை. தேசிய விருது மகிழ்ச்சியில் மிதந்துகொண்டிருந்த  வருக்கு, பத்மஸ்ரீ விருது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தொடக்க காலத்தில் இவர் ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தார். ‘அழகற்றவர்’, ‘அவ்வளவு சிறப்பாக இல்லை’ என்றெல்லாம் கூறி, அந்த படங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அந்த காயங்கள் எல்லாம் அவர் மனதில் இருக்கிறதா? இல்லையா? தெரிந்துகொள்வோமா!

“பத்மஸ்ரீ எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. அன்று நான் ஐதராபாத்தில், படப்பிடிப்பில் இருந்தேன். அறிமுகமற்ற நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தேன். எதிர்முனையில் இருந்த என் கணவர் உற்சாகத்தோடு எனக்கு பத்மஸ்ரீ கிடைத்ததை சொன்னார். நான் ஜோக் அடிக்காதீர்கள் என்றேன். பின்பு டெல்லியில் இருந்து போன் வந்தது. ‘பத்மஸ்ரீ தந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். கவுரவத்தோடு பெற்றுக்கொள்வேன் என்றேன். உடனே அப்பா, அம்மாவை அழைத்து சொன்னேன். ஆலப்புழையில் என் சகோதரி வீட்டில் இருந்த அவர்கள், நான் செய்தியை சொன்னதும் அழுதுவிட்டார்கள்”
திரை உலகில் நிறைய மூட நம்பிக்கை இருக்கிறது.. அல்லவா?
“சக்ரம் சினிமா முடங்கிப்போனதற்கு நான் காரணமல்ல. ஆனால் அதில் நடித்ததற்காக நான் ராசியில்லாதவளாக்கப்பட்டேன். படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில் இருந்து இப்படி ஒரு முத்திரையை நான் எதிர்பார்க்கவில்லை”
வித்யா பாலன் என்பது தென்னகத்து பெயர், இந்தி திரை உலகத்திற்கு ஏற்ப பெயரை மாற்ற வேண்டும் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
“சக்ரத்தில் நடித்தபோது அதன் டைரக்டர் லோகிததாஸ் வித்யா அய்யர் என்று பெயரிட்டார்.  மஞ்சு வாரியார், சம்யுக்தா வர்மா போன்ற இணைப்பு பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்தது. வித்யாவுடன் அய்யரை சேர்த்தால் ராசியான நடிகையாகிவிடுவேன் என்று அவர் சொன்னார். அப்படியிருந்தும் படம் வெளிவரவில்லை. அப்போதுதான் பெற்றோர் வைத்த பெயர்தான் சிறந்த ராசிக்குரியது என்பதை நான் உணர்ந்தேன்”
சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிய டர்ட்டி பிக்சரில் நடித்தபோது வெளியான உங்களது கவர்ச்சி போஸ்டர்கள் உங்கள் பெற்றோரிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது?
“தனது உடலை தனது வாழ்க்கை வெற்றிக்காக பயன்படுத்தும் பெண்களை இந்த சமூகம் ஒரு வித்தியாசமான கோணத்தில்தான் பார்க்கிறது. டர்ட்டி பிக்சர் படத்தின் இயக்குனர் என்னிடம், ‘சில்க் சுமிதாவின் உடலை பயன்படுத்தி பலர் வாழ்க்கையில் உயர்வை அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் சில்க் ரசிகர்களிடம் அன்பையும், அனுதாபத்தையும் பெற்றார். வித்யா, சில்க்காக நடித்தால் அதே அன்பை ரசிகர்களிடம் இருந்து பெற முடியும்’ என்றார். ஆனாலும் உடலை திறந்து காட்டும் அந்த சினிமாவில் நடிக்க நான் ரொம்ப யோசித்தேன். திரைக்கதையை வாசித்து முடிக்க ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டேன். நாளை என் குடும்பத்தினர் முகத்தை பார்க்கும்போது எனக்கு கூச்சம் வரக்கூடாது என்ற உணர்வில் நான் தெளிவாக அந்த சினிமாவை அணுகினேன். பாதிமனதோடு நான் அந்த படத்தில் நடித்திருந்தால் காட்சிகள் ஆபாசமாக மாறியிருக்கும். படத்தை திரையிடும்போது அப்பா இருந்தார். ‘உன் நடிப்பில் வல்கராக எதுவும் இல்லை’ என்றார். அம்மா என்னிடம், ‘அந்த படத்தில் உன்னை நான் பார்க்கவில்லை. சில்க்கைதான் பார்த்தேன்’ என்றார். எனக்கு அது போதும். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தபோது, நான் எடுத்த முடிவு சரியானது என்று என் மனது சொன்னது”
சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரியாக இருந்த அனுபவம் எப்படி இருந்தது?
“என்னை அவர்கள் அழைத்தபோது, சினிமாவை தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் அறிவு எனக்கு இல்லை என்று கூறினேன். ஆனால் அவர்களோ ‘சினிமாவை சராசரி ரசிகனாக இருந்து பார்க்கும் உங்களைப் போன்றவர்கள்தான் தேவை’ என்றார்கள். 20 சினிமாக்களை நான் பார்த்தேன். ஆங்லியும், ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கும் என்னோடு ஜூரியாக இருந்தார்கள். இந்திய சினிமா பற்றி ஆங்லிக்கு நல்ல கருத்து இருந்தது. ஆனால் ஸ்பீல்பர்க் இந்திய சினிமா பாட்டும், நடனமுமாக இருக்கிறது என்றார். அவர்களெல்லாம் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்தாலும், சாதாரண ரசிகனின் மனநிலையில் இருந்துதான் சினிமாவை மதிப்பிடுகிறார்கள். ‘தொழில்நுட்பங்கள் அல்ல, ரசிகனின் மனதைத் தொடும் காட்சிகள்தான் சினிமாவை தீர்மானிக்கிறது’ என்று ஸ்பீல்பர்க் சொன்னார்”
திருமணத்திற்கு பின்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது?
“வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் விலாசம்தான் மாறியிருக்கிறது. பெற்றோருடன் வசித்த நான் இப்போது கணவர் சித்தார்த்துடன் வசிக்கிறேன். அவரோடு நிறைய அன்பு வைத்திருப்பதால் அவருக்கு நான் உணவெல்லாம் தயாரித்து கொடுப்பதில்லை. இரண்டு பேரும் அவரவர் வேலைக்கான பயணத்தில் இருக்கிறோம். மும்பையில் இருக்கும்போது பெரும்பாலும் ஒன்றாகிவிடுவோம்’’
வித்யா பாலன் பாலக்காட்டில் புத்தூர் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் பாலக்காடு தமிழ் பேசுகிறார்.
மலையாளம் உங்களை ராசிஇல்லாத நடிகை என்றது. தமிழ் சினிமாவும் உங்களை நிராகரித்தது. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
“மலையாளத்தில் நான் நடித்த முதல் படமான சக்ரம் 21 நாட்கள் படப்பிடிப்போடு முடங்கிப்போனது. அதனால் ராசியில்லாத நடிகை என்றார்கள். நான் நடித்த இரண்டாவது மலையாள படமும் வெளிவரவில்லை. தமிழில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது, ‘எனக்கு நடிக்கத் தெரியவில்லை’ என்றுகூறி வெளியேற்றினார்கள். இன்னொரு சினிமாவில், சென்னையில் பிரமாண்டமான ஹோர்டிங்ஸ் எல்லாம் வைத்த பின்பு ‘எனக்கு அழகில்லை’ என்று கூறி ஒதுக்கினார்கள். சினிமா என்னை புறக்கணித்த அந்த மூன்றாண்டுகளில்தான் என்னை நானே முழுமையாக வளர்த்துக்கொண்டேன். அடுத்து ‘பரிணித’ என்ற சினிமாவில் என்னை நடிக்கவைக்க மூன்று மாதங்கள் பரிசீலித்து ஆடிசன் செய்தார்கள். நான் தளர்ந்து போகவில்லை. அந்த படம்தான் என் வாழ்க்கையிலே திருப்பத்தை ஏற்படுத்தியது” dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக