சேலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா மசூதியின் வாசலில் தே.மு.தி.க
வேட்பாளர் சுதீஷ் துண்டறிக்கைகளை கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது
பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வந்த பெறும் திரளான இஸ்லாமியர்கள் ‘எங்கள்
இனத்தை கொத்து கொத்தாக குஜராத்தில் கொன்று குவித்தது பா.ஜ.க கட்சி மோடி.
அவரை ஆதரித்து நீங்கள் இங்கேயே பிரச்சாரம் செய்யலாமா?’ என்று
கொந்தளித்தனர்.>
இந்நிலையில்
அங்கே தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜூம் வாக்கு சேகரிக்க வந்த
நிலையில் தி.மு.க வினர் தங்களை தாக்கி விட்டதாக பேச ஆரம்பித்தனர்
தே.மு.தி.க.வினர். இந்த தகவலால் இருதரப்பும் மோதிக்கொண்டனர். காவல்துறை
தலையிட்டும் பிரச்சனை அடங்கவில்லை. அதன் பின்னும் இஸ்லாமியர்கள் தே.மு.தி.க
விற்கு எதிராக கோசமிட அங்கிருந்து வாக்கு சேகரிக்காமலேயே கிளம்பினார்
சுதீஷ்.
நாம்
அங்கே திரண்டு இருந்த இஸ்லாமியர்களிடம் பேசினோம். த.மு.மு.க வை சேர்ந்த
இப்ராகிம் கூறும்போது , ‘எங்கள் இஸ்லாமிய இனத்தை குஜராத்தில் கொன்று
குவித்த கட்சி பா.ஜ.க மோடி. அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு எந்த
தைரியத்தில் இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து ‘மோடியை பிரதமராக்குங்கள்’
என்று வாக்கு கேட்கலாம்? இனியும் இவ்வாறு பள்ளிவாசல் முன்பு வந்து அவர்கள்
வாக்கு கேட்டால் சாணியை கரைத்து மூஞ்சில் ஊற்றுவோம்’ என்றார் ஆக்ரோஷமாய்.
காவல்துறையோ
‘தே.மு.தி.க –தி.மு.க இரண்டு கட்சிகளுக்குமே இங்கு பள்ளிவாசல் முன்பு
வந்து வாக்கு சேகரிக்க அனுமதி தரவில்லை.மீறி வந்துள்ளனர்’ என்றனர்.
பதட்டமாக உள்ளது சேலம். nakkheeran.in/
பதட்டமாக உள்ளது சேலம். nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக