ஞாயிறு, 2 மார்ச், 2014

மத்திய சட்ட அமைச்சராக அம்மா வேட்பாளர் வருவாரு ? சொத்துக் குவிப்பு வழக்கு தூள் ?

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் (அவருக்கு எதிராக) வாதாடும் வழக்கறிஞர் பவானி சிங் மீது நீதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வழக்கை தாமதப்படுத்த முயற்சிப்பதாக அவர் மீது நீதிபதி குற்றம் சாட்டினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக இவர்கள் மீது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் பல நீதிபதிகள், பல அரசு வக்கீல்கள் மாறிவிட்டனர்.
ஆனால், வழக்குதான் முடிந்தபாடில்லை.
காரணம் வழக்கை முடிக்க விடாமல் ஜெயலலிதா தரப்பில் ஏதாவது காரணங்கள் சொல்லி இழுத்தடிக்கப்படுகிறது. மேலும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசு சார்பில் வாதாடும் வக்கீலும் ஜெயலலிதா அரசு நியமித்த வக்கீல் போலச் செயல்பட்டு வருகிறார்.A total of 15 advocates were among the candidates the AIADMK supremo announced for all 39 seats in Tamil Nadu and the lone Puducher

இதனால், இந்த வழக்கு சிந்துபாத் கதைபோல முடிவுக்கு வராமல் உள்ளது.  ஆனால்,  வழக்கை முடித்துவிட அம்மா அருமையான திட்டம் ஒன்று வைத்திருக்கிறார் என்பது நீதிபதிக்கு தெரியுமா? 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா, ‘அரசு பணி’ காரணமாக ஆஜராகவில்லை என்றும், சசிகலா, இளவரசி ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் ஆஜராக முடியவில்லை என அவர்களது சார்பில் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களுக்கு வழக்கம்போல அரசு வழக்கறிஞரான பவானி சிங் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அரசு வக்கீல் பவானி சிங், 1996-ம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட 1116 கிலோ வெள்ளிப் பொருட்களை பெங்களூர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் நேற்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், மெயின் வழக்கை விட்டுவிட்டு, இந்த விவகாரத்தில் சிறிது காலம் கடத்தலாம் என்ற நிலையை, அரசு வக்கீல் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அரசு வக்கீல் பவானி சிங் செயல்பாடுகளால் எரிச்சலடைந்த நீதிபதி ஜான் மைக்கல் குன்றா, “இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்த அரசு வழக்கறிஞர் முயற்சிக்கிறார். வெள்ளிப் பொருட்களை பெங்களூர் கொண்டுவருவது வழக்கிற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. அரசு வழக்கறிஞரின் மனு உள் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்றார்.
அட போங்க சார். நம்ம கட்சி 40-க்கு-40 ஜெயிச்சு அம்மா பிரதமர் ஆனா, ‘அம்மா சார்பு’ நீதிபதியே புதிதாக வருவார்.. அப்ப என்ன செய்வீங்க?
அம்மா வேட்பாளர் பட்டியலில் 8 வக்கீல்கள் இருப்பது எதற்காக? மத்திய சட்டத்துறை அமைச்சராக நம்மாளு வருவாரு சார்…!
viruvirupu.com/ தூள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக