சனி, 8 மார்ச், 2014

வீரப்ப மொய்லி.: காங்கிரஸ் - தி.மு.க., இடையே நல்ல புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது

காங்கிரஸ் மூத்த தலைவர்களில், முக்கியமானவர், வீரப்ப மொய்லி. மத்திய அமைச்சரவையில், முக்கியத்துவம் வாய்ந்த, பெட்ரோலிய துறையை கவனித்து வரும் இவர், காங்கிரஸ் மேலிடத்திற்கு மிகவும் நம்பகமானவர். தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக பல ஆண்டுகள் பதவி வகித்த இவர், டில்லியில், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

வரும் லோக்சபா தேர்தலில்,தமிழகத்தில் எந்த கட்சியுடன், காங்., கூட்டணி அமைக்கும்?

தமிழகத்தில், கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க., எங்களின் நட்பு கட்சி. கூட்டணி குறித்த விஷயங்கள், விரைவில் இறுதி செய்யப்படும். கலைஞரையும் அவரது குடும்பத்தினரையும் ராகுல்ஜி எப்படி நடத்தினார் என்பதை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியமா என்ன ?


தி.மு.க.,வுடன், இன்னும் பேச்சுவார்த்தை நடக்கிறதா?
ஆம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், இந்த பேச்சுவார்த்தையில், நான் பங்கெடுக்கவில்லை. திருப்தியான வகையில், எல்லாம் நடக்கிறது; விரைவில், முடிவு தெரியும்.

10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த கட்சியான, தி.மு.க., உடன், கூட்டணி குறித்து பேச, இவ்வளவு காலதாமதம், இழுபறி ஏன்?
சில, கருத்து வேறுபாடுகள் உள்ளன. கோர்ட்டில், நிலுவையில் உள்ள, சில வழக்குகளை மையமாக வைத்துதான் பிரச்னை. இந்த வழக்குகள், கூட்டணி அமைப்பதற்கான பாதையில், தடங்கலாக வந்துவிட கூடாது. காங்கிரஸ் - தி.மு.க., இடையே நல்ல புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது. இது, மென்மேலும், தொடர வேண்டும். தி.மு.க.,வைத் தவிர, தமிழகத்தின்மற்றொரு பிரதான கட்சியான,தே.மு.தி.க., உடனும் பேச்சுவார்த்தை உள்ளதா?
அந்த கட்சியுடன், பேச்சுவார்த்தைநடத்துவதும், கூட்டணிக்கு அழைப்பதும், வேறு. அதற்கும், தி.மு.க.,வுடன் பேசும் கூட்டணி பேச்சுக்கும் சம்பந்தம்கிடையாது.

தி.மு.க.,வுடன், பேச்சு நடப்பதாக, கூறுகிறீர்கள். சிதம்பரம். வாசன் போன்ற, தமிழக முக்கிய தலைவர்களுக்கே, இந்த விவரம் தெரியவில்லையே. யார் தான், பேச்சுவார்த்தை, நடத்துகின்றனர்?
காங்கிரசைப் பொறுத்தவரை, வெவ்வேறு கால கட்டங்களில், பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஒவ்வொரு கட்டத்திலும், பேச்சுவார்த்தை குறித்த முன்னேற்றங்களை, உள்ளூர் தலைவர்களுக்கு, தெரிவிக்கப்படும். அந்த வகையில், தமிழக காங்., தலைவர்களுக்கும், உரியதகவல்கள்தெரிவிக்கப்படுகின்றன.

தமிழகத்தில், தனியாக போட்டியிடகாங்கிரஸ் தயாரா?
காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. எனவே, மாநில கட்சிகளுடன், சில இடங்களில், கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறோம். தமிழகத்தில், காங்., உடன் கூட்டணி வைத்த, திராவிட கட்சிகளே. தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன. இது, கடந்த கால வரலாறு. இனி வரும் காலங்களிலும், இதுதான் நடக்கும். இருப்பினும், தனித்துப் போட்டியிட காங்., தயார்தான்.

இலங்கை விவகாரத்தில், தமிழகத்தில், காங்., முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதே. அதை, எப்படி சரிசெய்வீர்கள்?
இலங்கை தமிழர்களுக்கு, 40 ஆண்டுகளாக, நன்மை செய்யும் ஒரே கட்சி, காங்கிரசே. இலங்கை என்பது, அண்டை நாடு. அதை, பகைத்துக் கொள்வது, சரியல்ல. அந்நாட்டோடு பேசினால்தான், அங்குள்ள தமிழர்களுக்கு, ஏதாவது உதவ முடியும்.மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணவும், காங்., முனைப்போடு செயல்பட்டு வருகிறது. எனவே, தமிழர்களுக்கு எதிரானது, காங்கிரஸ் என்பது பொய். அதுபோன்ற மாயையை, உருவாக்கப் பார்க்கின்றனர்; அது நடக்காது.

நீங்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சக பொறுப்பை கூடுதலாக ஏற்கும் முன், அந்த அமைச்சகத்தில், 'ஜெயந்தி டேக்ஸ்' என்ற பெயரில், வரியெல்லாம் இருந்ததாக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி குற்றம் சுமத்தி உள்ளாரே?
மோடியின் குற்றச்சாட்டு பொய்யானது.நான் பொறுப்பேற்றவுடன், இந்த அமைச்சகத்தின் கோப்புகள் அனைத்தையும் வாங்கி, ஆய்வு செய்தேன். அதுபோன்ற வரி போட்டதாக தகவல் இல்லை.

தென்மாநிலங்கள்தான், முந்தைய இரண்டு தேர்தல்களில், காங்கிரசுக்கு கை கொடுத்தன. வரும் தேர்தலில், அந்த நிலைமை மாறுமா?

கருத்துக் கணிப்புகள் எல்லாமே பொய்; ஆதாரமற்றவை. பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படுபவை. கர்நாடகாவில், 20, கேரளாவில், 15 'சீட்'கள், வரும் தேர்தலில் எங்களுக்கு கிடைக்கும்.

ஆந்திராவில், வெற்றி வாய்ப்பு,எப்படி?
அங்கு, தெலுங்கானா பகுதியில், மொத்தமுள்ள, 17 இடங்களில், 15 இடங்களை, காங்கிரஸ் கைப்பற்றும். சீமாந்திராவிலும், 6 முதல் 7 தொகுதிகளை வெல்வது, நிச்சயம். ஆந்திராவை பிரிக்கும் முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த தொகுதிகளும்கூட, கிடைக்குமா என்பது சந்தேகமே.இவ்வாறு, வீரப்ப மொய்லி, கூறினார்.
வீரப்ப மொய்லி,மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
-நமது டில்லி நிருபர்-  தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக