செவ்வாய், 25 மார்ச், 2014

கிடப்பில் துயிலும் திமுக திட்டங்கள் ! ஒரு மனநோயாளின் கையில் தமிழகம் ?

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கோ.முத்தையனுக்கு ஆதரவு திரட்டி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே திங்கள்கிழமை அவர் பேசியது:
நாங்கள் எப்போதும் உங்களை நாடி வருபவர்கள். ஆனால் சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு என்று முதல்வர் கூறுகிறார். மின்வெட்டு நேரத்தில் ஏற்றம், பஸ் கட்டணத்தில் ஏற்றம், பால் விலையில் ஏற்றம், மின் கட்டணத்தில் ஏற்றம், விலைவாசியில் ஏற்றம் என இவ் வகையான ஏற்றங்கள்தான் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
 கிடப்பில் திமுக திட்டங்கள்: மதுரவாயில் பறக்கும் சாலை ,சேது சமுத்ரம் கால்வை , விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மூலம் 120 வீடுகள், வீடு கட்டும் திட்டத்தில் ஏழை மக்களுக்கு 7,343 வீடுகள் ஆகியவை கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பெரிய திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. இதில் பாதாள சாக்கடைத் திட்டம் நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது 75 சதவீத அளவுக்கு பணிகள் முடிவடைந்துவிட்டன. இவற்றில் 25 சதவீத பணிகள் மட்டுமே மீதம் இருந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.
 இதுபோல் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஐ.டி. பார்க் கொண்டு வருவதாக அறிவித்தோம். ஆனால் அது கிடப்பில் கிடக்கிறது.
விழுப்புரம், திண்டிவனம் தொழிற்பேட்டைகளும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லாமல் உள்ளன. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தாமதப்படுத்தப்படுகின்றன. நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்துதான் இந்த திட்டங்களை முடிக்க வேண்டும்போல் இருக்கிறது.
 விழுப்புரம் மாவட்டம் எப்போதும் திமுகவின் நம்பிக்கைக்குரிய மாவட்டம். எனவே இம் மாவட்ட மக்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் நகர் மன்றத் தலைவர் ரா.ஜனகராஜ், மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்  dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக