சனி, 15 மார்ச், 2014

தமிழ் ரசிகர்களை மிகவும் பிடிக்கும்: தமன்னா


  

நடிகைகளுக்கு கோவில் கட்டும் தமிழ் ரசிகர்களை மிகவும் பிடிக்கும் என்று தமன்னா கூறினார். இது குறித்து மும்பையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
நான் பத்து வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் எனக்கு தமிழ், தெலுங்கு பேச தெரியாது. திருவிழாவில் தவறிபோன குழந்தை மாதிரி இருந்தேன். படக் குழுவினர் ஆதரவாக இருந்தனர். நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு இருமொழிகளையும் கற்றுக் கொண்டேன். இப்போது இந்தி படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே இந்தியில் நான் நடித்த ‘ஹிம்மத்வாலா’ படம் தோல்வி அடைந்தது. நான் அதிர்ச்சியானேன். பத்து வருட சினிமா அனுபவத்தால் அதில் இருந்து மீள முடிந்தது. எனது படங்கள் தோற்று இருக்கலாம். ஆனால் நடிகையாக நான் தோற்கவில்லை. அப்படி தோற்று இருந்தால் பத்து வருடம் சினிமாவில் நீடிக்க முடியாது.


இந்தியில் இரண்டு படங்களில் நடித்து கொண்டு இருக்கிறேன். மேலும் படங்கள் வருகிறது. இதற்காக தமிழ், தெலுங்கு படங்களை புறக்கணிப்பதாக கருதக்கூடாது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். நடிகைகளை அவர்கள் கடவுள் போல, கொண்டாடுகிறார்கள். நடிகைகளுக்கு கோவிலும் கட்டுகிறார்கள். அவர்களை எப்போதும் மறக்க மாட்டேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.cinema.maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக