சனி, 15 மார்ச், 2014

தியாக தீபம் ஜெயலலிதா : காங்கிரஸ், திமுக தன்னலம் மிகுந்த கட்சிகள்: !

காங்கிரஸ், திமுக தன்னலம் மிகுந்த கட்சிகள் என தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா, இன்று தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், "வரவிருக்கும் மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீழ்ச்சியுற்ற இந்தியாவை எழுச்சி காண வைக்கும் தேர்தல். கொடுங்கோல் ஆட்சியை துக்கு எறிந்து செங்கோல் ஆட்சியை நிலைநிறுத்தும் தேர்தல் இது. இத் தேர்தலில் மத்தியில் உள்ள மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்" என்றார்.
மேலும், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
தற்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை கடந்த 10 வருடங்களில் திமுக நிறைவேற்றாதது ஏன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கு திமுக-வே காரணம் என்றார்.
அடுக்கடுக்கான ஊழல்களால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்திய தேசத்து பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் ஜெயலலிதா பேசினார். அடடா மக்களின் ஞாபக மறதியில் ஜெயாவுக்கு உள்ள நம்பிக்கை  மெய்சிலிர்க்க வைக்கிறது  tamil.thehindu.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக