வெள்ளி, 7 மார்ச், 2014

மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு மனு மீது வரும் மார்ச் 11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக