திருவள்ளுர்(தனி) தொகுதி மாதவரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.
ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை
கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசிய அவர், வான்வழியே வரும்
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கொலை, கொள்ளைகள்
அதிகரித்துவிட்டன. தி.மு.க.வினால் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களும்
அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. தி.மு.க ஆட்சியில் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் சிந்திக்கும்
என்றும் ஸ்டாலின் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக