திங்கள், 31 மார்ச், 2014

ஸ்டாலின்: ஜெயலலிதாவின் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு !

என்னத்த செஞ்சி கிழிச்சீங்க...?
ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் உடுமலையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,
இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா என்ன சொல்கிறார் என்றால், மின்சாரத்தை பற்றி சொல்லுகிறார். மின் உற்பத்தி என்று எடுத்துக்கொண்டால் எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டதட்ட 2500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்ற ஒரு அண்டப்புளுகை, ஆகாசப் புளுகை ஜெயலலிதா மதுரையில் அவிழ்த்துவிட்டிருக்கிறார். 2500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்களே, நான் கேட்கிறேன் இதுவரையில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை இந்த 3 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா ஆட்சி உற்பத்தி செய்திருக்கிறதா. கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில், 2006ல் கலைஞர் 5வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது, மின் உற்பத்திக்கான பல திட்டங்களை தீட்டினார். 20,624 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,798 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் தந்தவர் கலைஞர். அதை ஜெயலலிதா நிறைவேற்றியிருந்தால், தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறியிருக்கும். ஆனால் அதனை நிறைவேற்ற ஜெயலலிதா முன்வரவில்லை.
2011 தேர்தலில் ஜெயலலிதா என்ன சொன்னார். நான் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்றார். மின்வெட்டே இல்லாத மாநிலமா என்பது தெரியாது. ஆனால் மின்சாரமே இல்லாத மாநிலமாக ஜெயலலிதா தற்போது மாற்றிக்கொண்டிருக்கிறார்.
1991ல் இருந்து 96 வரைக்கும் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது. 12 மாதத்திற்கு 12 ரூபாய்.  5 வருடத்திற்கு 60 ரூபாய். 60 ரூபாய் சம்பளத்தில் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்திருக்கிறார் என்று சொன்னால் யார் வீட்டு பணம்.
நீங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே, திமுக முன்னணியினர் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது, மாவட்டச் செயலாளர்கள் மீது பொய் வழக்கு போட்டீர்களே. நில அபகரிப்பு என்று சொல்லி பொய் வழக்கு போட்டீர்களே. இன்றைக்கு நான் அந்த அம்மையாரை பார்த்து கேட்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, உங்களிடத்திலேயே உள்ள அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் பதிவாகி இருக்கிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், புறம்போக்கு நிலஅபரிப்பு புகார், அமைச்சர் கேவி ராமலிங்கம் ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சொத்து குவிப்பு வழக்கு. அமைச்சர் செந்தில் பாலாஜி, மிரட்டல் கடத்தல். அமைச்சர் கேசி வீரமணி, தமிழக சிறுபாண்மை அமைச்சர் முகமது கான், முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பரஞ்சோதி என்றால் யார் என்று தெரியும் உங்களுக்கு பாலியல் பரஞ்சோதி. பரஞ்சோதியின் இரண்டாவது மனைவி டாக்டர் ராணி கொடுத்த புகார். ஆக இப்படி பல புகார்கள்.
இவர்களுடைய தலைவியாக இருக்கக் கூடிய ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய சோதனை வந்திருக்கிறது. பெங்களூரு சோதனை. அவர் சொல்லுகிறார். அதிமுக என்ற ரயில் வேக வேகமாக எக்ஸ்பிரஸ் போகும் வேகத்திலே செங்கோட்டையை நோக்கி டெல்லிக்கு போகபோகிறார்களாம். நான் சொல்லுகிறேன். அந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரையே தாண்ட முடியாது. இதுதான் உண்மை.
நான் உங்களையெல்லாம் (பொதுமக்களை) கேட்டுக்கொள்வது, ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் மக்களை பார்த்து கேட்பது செய்வீர்களா... செய்வீர்களா... செய்வீர்களா... இதைத்தான் கேட்கிறார். நாமெல்லாம் ஒன்று சேர்ந்து அவரை என்ன கேட்க வேண்டும் என்று தெரியுமா? செஞ்சீங்களா... செஞ்சீங்களா... என்னத்த செஞ்சி கிழிச்சீங்க... செஞ்சீங்களா... இதைத்தான் கேட்கணும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். ு  nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக