புதன், 12 மார்ச், 2014

விசுவாசிகளுக்கு இடமில்லாத தி.மு.க. வேட்பாளர் பட்டியல்- தி.மு.க.வின் நீண்டகால நிர்வாகிகள் அதிருப்


கட்சியில் நீண்டகாலம் இருப்போர் திமுக வேட்பாளர் தேர்வில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி கிளம்பி இருப்பதால், ஒரு சில வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக வேட்பாளர் பட்டிய லில், தொழிலதிபர்கள், டாக்டர் கள் எனக் கட்சிக்கு தொடர் பில்லாதவர்களுக்கு சீட் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒப்புத லின்றி, பல வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளதாகவும் கட்சியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தஞ்சாவூரில் திமுக வேட்பாளரின் உருவபொம்மையைக் கொளுத்தி, வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகிகள் கூறியதாவது: “இம்முறை, அதிமுக-விலிருந்து திமுகவுக்கு வந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், சிவகங்கைக்கு முன்னாள் எம்.எல்.ஏ., துரைராஜ், கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவர் ராஜரத்தினம், திண்டுக் கல்லுக்கு முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், கரூருக்கு முன்னாள் அமைச்சர் சின்னச் சாமி, பெரும்புதூருக்கு ஜெகத் ரட்சகன் மற்றும் தென் சென்னைக்கு முன்னாள் அதிமுக எம்.பி-யின் மகன் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அதிமுக-விலிருந்து திமுக-வுக்கு வந்தவர்கள்.
அதேசமயம், அதிமுகவி-லிருந்து வந்த சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், ரகுபதி, ஈரோடு முத்துச்சாமிக்கு சீட் கிடைக்காததால், அவர்களது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். மதிமுகவி-லிருந்து வந்த எல்.கணேசன், கண்ணப்பன், திருச்சி செல்வராஜ், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சீட்டும் கிடைக்கவில்லை என்று அவர்களது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். மதிமுக-விலிருந்து வந்த பொன்.முத்துராமலிங்கத்துக்கு மட்டும் சீட் கிடைத்துள்ளது.எம்.பி., எம்.எல்.
ஏ-க்கள் மீதான வழக்குகளை ஒரு ஆண்டில் முடிக்க வேண்டுமென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கும், குற்றச் சாட்டுகளுக்கும் உள்ளான ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பது, கட்சியினரை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
சென்னையில் மா.சுப்பிர மணியத்துக்கு வாய்ப்பில்லாமல் போனது, தென்சென்னை திமுக-வை திகைக்க வைத்துள்ளது. சேது பொறியியல் கல்லூரி அதிபர் முகமது ஜமீல், சி.டி.எஸ். நிறு வனங்களின் தலைவர் தேவதாச சுந்தரம், தமிழ்நாடு தொழில் வர்த்தகசபை முதுநிலை தலைவர் ரத்தினவேல், சேலம் தொழிலதிபர் உமாராணி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபுவுக்கு சீட் கிடைக்காததால், சேலம் மாவட்ட திமுக-வில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு வேட்பாளர் பவித்திரவள்ளியின் குடும்பத்தினர், முன்பு மதிமுக நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, தென்மாவட்டங்களில் நாடார் சமுதாயத்தினருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்ப தால் முக்குலத்தோர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக கள்ளர் மற்றும் நாயுடு சமூகப் பிரதிநிதிகள் இடம்பெறாததால் தெற்கில் திமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. படையாச்சி சமூகத்தினர் அதிகம் உள்ள புதுவையில் நிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர் நாஜிமுக்கும் ஆதரவு குறைவுதான்.
முதியவர்களுக்கு அதிக இடம்
திமுக வேட்பாளர்களில் அதிக வயதுடையவர் 74 வயதான தேனி வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் ஆவார். மிகவும் இளையவர் 26 வயதான ஈரோடு ஹெச்.பவித்திரவள்ளி. திருப்பூர் டாக்டர் செந்தில்நாதன் (73), கடலூர் நந்தகோபாலகிருஷ்ணன் (73), தஞ்சை டி.ஆர்.பாலு (72), விருதுநகர் ரத்தினவேல் (71), ராமநாதபுரம் முகமது ஜமீல் (70), திருநெல்வேலி தேவதாச சுந்தரம் (72) உள்ளிட்ட எழு பேர் 70 வயதைக் கடந்தவர்கள். 50 வயதிலிருந்து 69 வயதுக்குட்பட்டோர் 21 பேர். 35 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டோர் 6 பேர். இளம்பெண் ஒருவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக