செவ்வாய், 11 மார்ச், 2014

ஜாதிப்பெயரை சூட மறுத்த வித்யா பாலன் (வித்யா ஐயர்)

ஒரிஜினல் பெயரை மாற்ற சொன்னதால் பட வாய்ப்பை உதறினார் வித்யா பாலன்.வித்யாபாலன் ஆரம்ப கட்டத்தில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் நடிக்கவில்லை. அதன்பிறகு அவர் தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளாமல் பாலிவுட்டுக்கு சென்றார். குடும்ப பாங்காக நடித்துக்கொண்டிருந்தவர், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்‘ல் சில்க் வேடத்தில் படுகவர்ச்சியாக நடித்து அசத்தினார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார். தொடர்ந்து ‘கஹானி‘ உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையில் தேர்வு செய்த படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடிக்கிறார்.

முன்னதாக அவருக்கு மலையாளத்தில் தாஸ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்கனவே ராசி இல்லாத நடிகை என்று அவர் மீது முத்திரை குத்தப்பட்டிருந்தது. இதை காரணம் காட்டி, உங்களது பெயரை வித்யா ஐயர் என்று மாற்றிக்கொண்டால் மஞ்சு வாரியர், சம்யுக்த வர்மா போன்று புதிய இமேஜ் கிடைக்கும் என்று குறிப்பிட்டாராம். இதை கேட்டு கோபம் அடைந்த வித்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். ‘வித்யாபாலன் என்பது எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயர். அதுதான் எனக்கு ராசி. என் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது‘ என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். வெளிவராமல் இருந்த இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியின்போது வித்யாபாலனே மனவேதனையுடன் வெளிப்படுத்தி உள்ளார். - tamilmurasu.org 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக