திங்கள், 3 மார்ச், 2014

சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா? -கலையரசன் (சிறப்பு கட்டுரை)


2010 thaiponkalசோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. “தமிழர் திருநாள்” என்று கருதப் படும் தைப் பொங்கலைக் கூட சோழர்கள் கொண்டாடி இருக்கவில்லை.
//தமிழகத்தின்  நெற்களஞ்சியமான தஞ்சையில் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாக எது இருந்தது? தைப்பொங்கல்? கிடையாது. …. சோழர் ஆட்சிக் காலத்தில் இந்திர விழாவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கத்தில் விழா எடுக்கிற மரபு பல ஆண்டுகளாக சோழ நாட்டில் இருந்து வந்துள்ளது.

கி.பி. 13 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான், வேளாளர்   சமூகத்தினரால் தைப்பொங்கல்   தமிழர்களின் முதன்மையான விழா ஆனது. இதனால் ராஜராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, சோழர் காலம் வரைக்கும் உழவர்களின் விழாவாகப் பொங்கல் இருந்தது கிடையாது.// - ச. ந. கண்ணன் எழுதிய “ராஜ ராஜ சோழன்” என்ற நூலில் இருந்து)
சோழர்கள்   தமிழர்கள் என்று நீண்ட காலமாக   நம்பப்பட்டது. இருபதாம் நூற்றாண்டுத்   தமிழ் தேசியவாதிகள் (அவர்களும் உண்மையான தமிழர்களா என்பது சந்தேகம்) அந்தக் கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வந்துள்ளனர்.
ஆனால், வரலாற்றில் எங்கேயும் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. மேலும் சோழர்கள் தெலுங்கர்கள் என்பதை, ஆந்திரப் பிரதேச வரலாற்று நூலும் கூறுகின்றது. (The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.)
சோழர்கள் ஆண்ட ஆந்திரா மாநிலப் பகுதிகளை, நமது தமிழ் தேசியவாதிகள் யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. சோழர்கள் தமது தலைநகரத்தை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றி இருக்கலாம். தமிழ்ப் பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கலாம்.
சோழர்கள் பிராமணர்களை குடியேற்றினார்கள். ஆகம சைவ மதத்தை பின்பற்றினார்கள். சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், அவர்களது குடிமக்களும், போர்வீரர்களுமாக தமிழர்களே பெரும்பான்மையாக இருந்துள்ளார்கள்.
ச. ந. கண்ணன் எழுதிய ராஜ ராஜ சோழன் என்ற நூலில், சோழர்களின் பூர்வீகம் பற்றி தெளிவாக குறிப்பிடப் படவில்லை. சோழ அரச பரம்பரையினர் தங்களுக்கு   தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கலாம். அதெல்லாம் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிக்க போதுமானவை அல்ல.
TempleIndiaதஞ்சை பெருங்கோயில்
சோழர்களுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் கன்னடர்கள் என்று குறிப்பிடப் படுகின்றது. பல்லவர்கள், முத்தரையர்களை வெளியேற்றுவதற்கு, சோழர்களை பயன்படுத்தி உள்ளனர்.
அநேகமாக, சோழர்களும் முத்தரையர்களின் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், வெவ்வேறு இனக் குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அந்தக் காலங்களில் உறவினர்களே ஒருவரோடு ஒருவர் பங்காளிச் சண்டையில் ஈடுபடுவது சாதாரண விடயம்.
ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான். அதற்கு பிரதியுபகாரமாக, பல்லவர்கள் தஞ்சையை சோழர்களுக்கு பரிசளித்தார்கள்.
பிற்காலத்தில் பலமான இராணுவ சக்தியாக வளர்ந்த சோழர்கள், பாண்டியர்களையும், பல்லவர்களையும் போரில் வென்று, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அதே நேரம், கன்னட சாளுக்கியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டார்கள்.
Moovendar
சேரர், சோழர், பாண்டியர்
சோழர்களின் படைகளில், தமிழ்ப் போர்வீரர்கள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். இந்தோனேசியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்புகள் காரணமாகவும், நிறைய தமிழ் வணிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதற்காக தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், அதன் அர்த்தம் சோழர்கள் தமிழர்கள் என்பதல்ல. குடிமக்கள் தமிழர்களாக இருந்தாலும், அவர்களை ஆண்டவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
உலகில் உள்ள வரலாறு முழுவதும் மன்னர்களைப் பற்றி மட்டுமே எழுதப் பட்டுள்ளது. அன்று வாழ்ந்த மக்களைப் பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் தான் இந்தக் குழப்பம்.
tamilnadu4
தமிழகத்தில் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில்,சோழர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியாது” என்று எழுதி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? ஏனென்றால், ஆந்திரா பிரதேச வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், சோழர்களின் பூர்வீகம் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளன.
(சோழர்களின் பூர்வீகம், ஒரிசாவுக்கு அண்மையிலான வட ஆந்திரா பிரதேசத்தில் உள்ள வெங்கி என்று குறிப்பிடுகின்றனர்.)
ஆந்திரா வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சோழர்களின் பூர்வீகம் பற்றிய தகவல் மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, சோழ மன்னர்களின் பெயர்கள்,வரலாற்றுத் தகவல்கள் இரண்டு இடத்திலும் ஒத்துப் போகின்றன. ஒரு எழுத்துக் கூட வித்தியாசம் இல்லை என்பது தான் ஆச்சரியம்.
ஆந்திரா மாநில வரலாற்றைக் கூறும் நூல்களில் எல்லாம், சோழர்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சுருக்கமாக: சோழர்கள் ஆந்திரப் பிரதேச வரலாற்றின் ஓர் அங்கம். ஆந்திராவில் அவர்களை “சாளுக்கிய சோழர்கள்” என்று அழைத்தார்கள்.
ஏனென்றால், தென்னிந்திய சோழ சாம்ராஜ்யம், சாளுக்கியர்களுடனான ராஜதந்திர உறவுகள் இன்றி சாத்தியப் பட்டிருக்காது. சோழர்களுக்கும், சாளுக்கியர்க்ளுக்கும் இடையில், பரம்பரை பரம்பரையாக நெருக்கமான திருமண உறவுகள் இருந்து வந்துள்ளன.
தமிழக சரித்திர ஆசிரியர்கள், சோழர்களின் தென்னிந்திய சாம்ராஜ்யத்தை சோழர்கள் மட்டுமே ஆண்டதாக கருதுகிறார்கள். அதற்கு மாறாக, அது ஒரு “சாளுக்கியர் – சோழர்களின் கூட்டு சாம்ராஜ்யம்” என்று, தெலுங்கு சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதனால் தான், ஆந்திராவில் சோழர்களை, “சாளுக்கிய சோழர்கள்” என்று அழைக்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். “ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குந்தவை, கங்கை கொண்ட சோழபுரம்…..” இது போன்ற வரலாற்றுக் குறிப்புகள், ஆந்திரா சரித்திர நூல்களிலும் அப்படியே எழுதப் பட்டுள்ளன.
அதாவது, சோழ மன்னர்களின் பெயர்களும், வரலாற்றுக் குறிப்புகளும் எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால், ஆந்திராவில் தெலுங்கு சோழர்கள் என்றும், தமிழ்நாட்டில் அவர்களை தமிழ்ச் சோழர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
அது மட்டுமே வித்தியாசம். சோழர்களை ஒரு மொழித் தேசியத்திற்குள் திணிக்கும் போக்கு, பிற்காலத்தில் (இருபதாம் நூற்றாண்டில்) தோன்றி இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் தெலுங்கு தேசியவாதமும், மறுபக்கம் தமிழ் தேசியவாதமும் அரசியல் சக்திகளாக வளர்ந்து வந்தன. சரித்திர ஆசிரியர்களும் ஏதாவது ஒரு தேசியத்தை சார்ந்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
 -கலையரசன்-

2 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    பதிலளிநீக்கு