திங்கள், 17 மார்ச், 2014

மதுரையில்.அழகிரி கூட்டம் மண்டபம் நிரம்பி வழிந்தது

மதுரை தயா மகாலில் இன்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டப் போவதாக அறிவித்திருந்தார் மு.க.அழகிரி. அதன்படி, இன்று காலை ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.
காலை முதலே தொண்டர்கள் அதிகம் பேர் திரண்டு வந்தனர். இதனால், தயா மகால் நிரம்பி வழிந்தது. அமர்வதற்கு இடம் இல்லாமல் தொண்டர்கள் வெளியில்நின்று ஆரவாரம் செய்தனர். இந்தக் கூட்டத்தில் தனது புதிய கட்சி முடிவை அறிவிப்பார் அல்லது,. திமுகவைக் கைப்பற்றும் தனது நடவடிக்கை குறித்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அவரது ஆதரவாளர்கள் கலைஞர் திமுக என்ற பெயரில் சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருக்கின்றனர்.   dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக