ஞாயிறு, 23 மார்ச், 2014

மாணவி தற்கொலை ! பள்ளி கட்டண கொள்ளை ! விரக்தியடைந்த பூஜா !

பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாததால் 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணலி சி.பி.சி.எல். நகரைச் சேர்ந்தவர் மாறன். இவரது மனைவி பொற்கொடி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பூஜா, மணலியிலுள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பூஜா வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து மணலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பூஜாவின் பெற்றோர் கூறியது: பூஜா இருந்தார். பூஜா, வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றார். அப்போது பள்ளிக் கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததற்காக பள்ளி நிர்வாகம் பூஜாவை அழைத்துக் கண்டித்துள்ளது. மேலும் அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பூஜா, வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.
அதே நேரத்தில், கட்டணத்தை பெற்றோரிடம் கேட்டதாகவும், இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால்  விரக்தியடைந்த   பூஜா, தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக