சனி, 22 மார்ச், 2014

பா.ஜனதாவில் ஒலிம்பிக் ஊழல் சுரேஷ் கல்மாடி சேருகிறார்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி, காங்கிரஸ் எம்.பி. ஆன இவர் புனே தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி கேட்டார். ஆனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதால் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், அவரது மனைவிக்கும் போட்டியிட ‘சீட்’ ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் புனே தொகுதி விஷ்வஜீத் கதம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் கடும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர தீர்மானித்துள்ளார். இத்தகவலை அவரே தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, ‘‘காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே எனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கியிருக்கலாம். கட்சியின் இந்த நடவடிக்கை எனது ஆதரவாளர்களின் மனதை புண்படுத்தி உள்ளது.
எனவே, பா.ஜனதா கட்சியில் சேர்ந்து புனே தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன். ஏனெனில், அந்த தொகுதிக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்ய இருக்கிறேன்’’ என்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக