பாண்டியனுக்கு எதிராக தோழர்கள் ஆவேசத்துடன் கருத்துக்கள கூறினார்.கம்யுனிஸ்டுகளின் அரசியல் இருப்பை குழிதோண்டி புதைத்து விட்டு எல்லாவற்றிற்கும் மனம் போன போக்கில் நரம்பில்லா நாக்கால் வாயில் வந்ததை ...
மார்ச். 19–பாராளுமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகள் தலா 9 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றன.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வட சென்னை, கோவை, மதுரை கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 9 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலையும் அந்த கட்சி அறிவித்துவிட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, தர்மபுரி, கடலூர், திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்டின் மாநில நிர்வாக குழு கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் அந்த கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
மாநில செயலாளர் தா.பாண்டியன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், சிவபுண்ணியம் மற்றும் ஸ்டான்லி குணசேகரன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தா.பாண்டியனுக்கு எதிராக நிர்வாகிகள் ஆவேசம் அடைந்து கூச்சலிட்டனர். கட்சியின் பின்னடைவுக்கு அவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர்.
இன்று மாலை இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.maalaimalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக