ஞாயிறு, 2 மார்ச், 2014

BJP சார்பில் கெஜ்ரிவாலை எதிர்த்து கிரண் பேடி போட்டி?

ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய அண்ணா ஹசாரேவை பின்பற்றும் கிரண் பேடியை பாரதீய ஜனதா கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அவர் கெஜ்ரிவால் அரசியல் அனுபவமற்றவர் என்றும் மோடி தான் நாட்டை திறம்பட நடத்துவார் என நம்புவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது போன்றதாகும். எப்படியிருந்தாலும் அக்கட்சி நாட்டை ஆளப்போவதில்லை. நமது முதல் கடமை காங்கிரஸ் கட்சியிடமிருந்து நாட்டை காப்பாற்றுவது தான். எனவே பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ள  malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக