வியாழன், 27 மார்ச், 2014

BJP க்குள் நடக்கும் பனிப்போர் வீதிக்கு வந்த கேலிக் கூத்து! பின் னணியில் RSS


போபால், மார்ச் 26- பி.ஜே.பி.க்குள் நடக்கும் பனிப்போர் இப்பொழுது வீதிக்கும் வந்து சந்தி சிரிக் கிறது.
பா.ஜ.க., பிரதமர் வேட் பாளர், நரேந்திர மோடிக் கும், கட்சியின், முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட் டுள்ளதாக வெளியாகும் தக வல்களால், பா.ஜ.க.,வினர் இடையே கலக்கம் நிலவு கிறது.
தேர்தல் பிரச்சார கூட் டங்களில், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என, தகவல் வெளியாகியுள் ளது.
வேட்புமனு தாக்கல்
பா.ஜ.க.வின் மூத்த தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜஸ்வந்த் சிங்கிற்கு, ராஜஸ்தான் மாநி லம், பார்மர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜ.க., தலைவர்கள், தனக்குத் துரோகம் செய்து விட்டதாக கூறிய ஜஸ்வந்த் சிங், அந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜஸ் வந்த்சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, பா.ஜ.க., மூத்த தலைவர் களில் ஒருவரான, மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வர், சுஷ்மா சுவராஜ் கண் டனம் தெரிவித்திருந்தார்.
பாரதீய ஜனதாவைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ்சிங் சவு கான் தலைமையிலான, மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மக்களவைத் தொகு தியில், சுஷ்மா சுவராஜ் போட்டியிடுகிறார். இதற் காக அவர், அங்கு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார். ஆனால், அவர் பங் கேற்கும் கூட்டங்களில், மறந்தும்கூட, பா.ஜ.க., பிர தமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பெயரை, அவர் உச்சரிப்பதில்லை. கட்சி யின் மற்ற தலைவர்கள், மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் நிலை யில், சுஷ்மா, தனி ஆவர்த் தனம் செய்வது, பா.ஜ.க., வினரிடையே, அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கலக்கம்
மோடிக்கும், அவருக் கும் இடையே, பனிப்போர் நிகழ்வதாகவும், இதனால், பா.ஜ.க.,வின் வெற்றி பாதிக் கப்படும் என்றும், அந்தக் கட்சியினர் கலக்கம் அடைந் துள்ளனர். மத்திய பிரதேசத் தின் 29 மக்களவைத் தொகு திகளுக்கு, மூன்று கட்டங் களாக தேர்தல் நடக்கிறது. சுஷ்மா போட்டியிடும், விதிஷா தொகுதிக்கு, அடுத்த மாதம், 24 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியின் இப்போதைய எம்.பி.,யும் அவர் தான்.
ஜஸ்வந்த் சிங் ஏற்கெ னவே அதிருப்தியில் உள் ளார். மூத்த பி.ஜே.பி. தலை வரான அவருக்குத் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் சுயேச்சையாக நிற்க முடிவு செய்துள்ளார்.
அத்வானிக்கும், அவர் கேட்ட தொகுதி கொடுக்கப் படாததால் சிக்கல் ஏற்பட் டது. தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக் குழுவின் தலைவரான முரளிமனோகர் ஜோஷி வழக்கமாக நிற்கும் வார ணாசி தொகுதி மறுக்கப் பட்டு, அந்தத் தொகுதியை மோடி பெற்றுக்கொண் டுள்ளார். மூத்த தலைவர் கள் பி.ஜே.பி.யில் ஒதுக்கப் படுவதாகக் குற்றச்சாற்று எழுந்து, கட்சியை ஒரு கலக்குக் கலக்குகிறது. இதற் கெல்லாம் காரணம், பின் னணியில் இருந்து பி.ஜே. பி.யை இயக்கும் ஆர்.எஸ். எஸ்.தான்.
2014 இல்
சுஷ்மா படம் இல்லை
கடந்த தேர்தல் அறிக்கை யில் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவராகக் கருதப்பட்டு, அட்டைப் படத்திலும் இடம்பெற்றிருந்த சுஷ்மா சுவராஜின் படம் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் திட்ட மிட்டு நீக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் அக்கட் சியில் முன்னணியில் இருக் கும் ஒரே பெண்மணி சுஷ்மாதான்! ஏற்கெனவே உமாபாரதி ஒதுக்கப்பட்டு விட்டார் என்பது தெரிந் ததே!
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக