அன்புமணி ராமதாஸ் :-வருகிற
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி
உள்ளோம். இந்த தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர்
முயற்சித்தனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் ஒரே பிரதமர்
வேட்பாளர் நரேந்திரமோடி தான். மற்ற கட்சிகளின் தலைவர்கள் யார் பிரதமர்
வேட்பாளர் என்பதை தெரிவிக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா
பிரதமராகும் கனவு பலிக்காது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40
தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிப்பெறும் என்று அவர்கள் பகல் கனவு
காண்கிறார்கள். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு
அளிக்க தயாராகி விட்டார்கள்.
தமிழகத்தில்
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை 6 ஆயிரத்து 500 கொலைகள்
நடந்துள்ளது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கல்வி,
சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளும்
செயல் இழந்து விட்டது. நான் மத்திய மந்திரியாக இருந்த போது, தேசிய
கிராமப்புற சுகாதாரத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதே போன்று 108
ஆம்புலன்சு திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம். இதுபோன்ற திட்டங்களை
சிறப்பாக செயல்படுத்திய பா.ம.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில்
தர்மபுரி மாவட்டம் கல்வித்துறையில் 28-வது இடத்திலும், சுகாதாரத்துறையில்
26-வது இடத்திலும், வேலைவாய்ப்பில் 30-வது இடத்திலும் உள்ளது. ஆனால்
டாஸ்மாக் விற்பனையில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்ற நாம் அனைவரும்
ஒன்றுபடுவோம். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிப்பெற செய்து,
நரேந்திரமோடியை பிரதமாக்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர்
பேசினார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக