சனி, 8 மார்ச், 2014

நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் மோதல்: நாட்டுப்படகை கவிழ்க்க முயற்சி 6 மீனவர்கள் உயிர் தப்பினர்



ராமேசுவரம்
நடுக்கடலில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டுப்படகினை கவிழ்க்க நடந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர்.
கவிழ்க்க முயற்சி
பாம்பன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மெரில்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பால முருகன், குமார், பாலா, பிரான்சிஸ், நாகராஜ் உள்பட 6 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர் கள் தென் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த னர். பின்னர் நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெ டுக்கும் பணியில் ஈடுபட்ட னர்.

அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வழியாக வந்த விசைப்படகு நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகு மீது மோதுவது போல் வந்த பின்னர் நங்கூரம் கட்டப் பட்டிருந்த கயிற்றின் மீது உர சியதால் அந்த நாட்டுப்படகு கவிழும் நிலை ஏற்பட்டது. இதில் படகில் இருந்த ஒரு மீனவர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார். உடனே மற்ற மீனவர்களை கடலில் தத்த ளித்த மீனவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்த னர்.
கண்டனம்
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் கூறியதாவது:- பாம்பன் அருகே தென் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை கவிழ்க்க அந்த வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள் முயற்சி செய்துள்ளனர். நள் ளிரவு நேரம் என்பதால் சம் பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு எண்ணையோ, மீன வர்களையோ சரியாக அடை யாளம் காண முடியவில்லை. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசால் தடை செய்யப் பட்ட வலைகளை பயன்ப டுத்தி மீன்பிடிப்பதை கண் டித்து நாட்டுப்படகு மீனவர் கள் போராட்டம் நடத்தி னோம். இதனால் ஆத்திரம டைந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகு மீன வர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தற் போது இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாசில்தார் மற்றும் மீன் துறை அதிகாரிகளிடம்மனு கொடுத்துள்ளோம். மேலும் நாட்டுப் படகு மீன வர் களுக்கு மீன்துறையினரும், கடலோர போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக