செவ்வாய், 4 மார்ச், 2014

திமுக 35 தொகுதிகளில் போட்டியிட திட்டம் ! திமுக கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை


 திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. இன்றே தொகுதிப் பங்கீடு முடிவாகிவிடும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கிறது. மாலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தப் படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளனர். சிதம்பரம், விழுப் புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக் கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி கேட்கப் பட்டுள்ளது. ஆனால் வேலூர் தொகுதியை தனது மகனுக்காக துரைமுருகன் கேட்டு வருகிறார். துரைமுருகன் மகன் துரை ஆனந்த் பெயரில் 138 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மயிலாடுதுறை, திருச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கான ஒதுக்கீடு பட்டியலில் உள்ளன. இதில், மயிலாடுதுறையே அவர் களுக்கு ஒதுக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. அதேபோல புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனித் தொகுதி ஒதுக்கப்படுகிறது. அங்கு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் போட்டியிடுவார் என கூறப்படு கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதுபோக, புதுவை உள்பட மீதமுள்ள 35 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை: கருணாநிதி
திமுக கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக வேட்பாளர் பட்டியல் சில நாட் களில் வெளியிடப்படும்.
திமுக தொகுதிப் பங்கீடு முடிவுகள் இரண்டு நாட்களில் தெரியவரும். தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரும். திமுக கூட்டணியில் வேறு கட்சிகளுக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக