வெள்ளி, 7 மார்ச், 2014

அழகிரி: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன்: இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் !

திருவள்ளூரை அடுத்த பூண்டியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தாயார் மங்கம்மாள் திருவுருவ பட திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவில் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட மு.க.அழகிரி கலந்து கொண்டார். உருவப் படத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:–
அன்னை இந்திரா காந்தி காலத்தில் தனித்து நின்று எதிர்த்து போராடிய தி.மு.க. தற்போது உதிரி கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சு நடத்தும் நிலைக்கு வந்துள்ளது. தி.மு.க. தலைவருக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டு விட்டு மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளிக்கிறது.
நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனது ஆதரவாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் அதன் பிறகு எனது வழியில் வாருங்கள்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
பின்னர் அவர் திருவாலங்காடு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக மு.க. அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூண்டி சந்திப்பில் இருந்து பாஸ்கரன் வீடு வரை அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.maalaimalar.com அண்ணன் பொடி வச்சு பேசுறாக அப்பாவுக்கு தப்பாத அஞ்சா நெஞ்சன்தான்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக