செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

Saudi ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக பெண் நியமனம் ! பெண்ணுரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டசவுதி அரேபியாவின் சொமய்யா ஜபர்தி

For the first time ever in the Kingdom of Saudi Arabia a woman will be the editor-in-chief of a major newspaper, as Somayya Jabarti has been appointed the editor of the Saudi Gazette, an English-language newspaper.பெண்ணுரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சவுதி அரேபியா விளங்கி வருகிறது. இங்கு வாழும் பெண்கள் தனியாக கடைவீதிக்கு செல்ல கூடாது. தலை முதல் கால் வரை மறைக்கும் ஆடைகளை அணிந்து, ஆண் துணையுடன் தான் வெளியே செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டும் உரிமம் மறுப்பு என அடுக்கடுக்காய் பெண்ணுரிமைக்கு எதிராக மதக் கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் ஏவி விடப்பட்டுள்ளன. சவுதியின் கடற்கரை நகரமான ஜெட்டாவில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடான ‘சவுதி கெஸட்’ பத்திரிகையின் ஆசிரியராக காலெத் அல்மயீனா பொறுப்பு வகித்து வருகிறார். விரைவில் ஓய்வு பெறுவுள்ள இவர், சொமய்யா ஜபர்தி என்ற பெண்ணை அந்த நாளேட்டின் அடுத்த ஆசிரியராக நியமித்துள்ளார்.


இந்த நியமனம் தொடர்பாக கருத்து கூறிய சொமய்யா ஜபர்தி, ‘இப்போது தான் கட்டுப்பெட்டித்தனம் என்ற கண்ணாடி மாளிகையின் மேற்கூரை விரிசல் விட்டுள்ளது. விரைவில் வாசற்கதவும் விரிவடையும் என நம்புகிறேன்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பணியின் மூலம் சவுதியில் வாழும் பல பெண்கள் அடுத்தடுத்து ஊடக துறையில் தடம் பதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர் விடுகிறது.

என்னைப் போலவே மற்ற பெண்களும் பெரிய பொறுப்புகளை ஏற்கும் நாள் வரை இந்த நியமனத்தின் மூலம் பெண்ணுரிமையை வென்றெடுத்து விட்டோம் என்று உறுதியாக கூறி விட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக