வியாழன், 13 பிப்ரவரி, 2014

டி ராஜேந்தர் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் ! Ex தீவிர அய்யப்ப பக்தர்.?

சென்னை: டி ராஜேந்தர் தன் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி ராஜேந்தர் தீவிர அய்யப்ப பக்தராக அறியப்பட்டவர். முன்பெல்லாம் தனது படத்தின் விளம்பரங்களில் அய்யப்பன் படத்தை பெரிதாக வெளியிடுவார் டிஆர். பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாக செய்திகள் உலாவின. பின்னர் அதை மறுத்தார் ராஜேந்தர். இந்த நிலையில், குடும்பத்தோடு அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியாவும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் மதம் மாறிவிட்டார்கள். இந்த மதமாற்றத்துக்கு சாட்சி சமீபத்தில் நடந்த ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம். முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இந்தத் திருமணம் நடந்தது. டி ராஜேந்தரின் மனைவி உஷா நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் கிறிஸ்தவராகிவிட்டவர். அதுமட்டுமல்ல, டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவிலேயே சிலுவைக் குறியீடு தொடர்ந்து இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக