ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

CBI சி.பி.ஐ.இயக்குனர் ரஞ்சித் சின்ஹா ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்தார்

புதுடில்லி: ''இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் தொடர்பாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், நான் எதையும் கூறவில்லை,'' என, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்ஹா, ஒரே நாளில், பல்டி அடித்துள்ளார்.

கடந்த, 2004ல், குஜராத் மாநிலத்தில், இஷ்ரத் ஜகான் என்ற கல்லூரி மாணவியும், அவரின் நண்பர்கள் மூன்று பேரும், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு, லஷ்கர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது, போலி என்கவுன்டர் என, குற்றச்சாட்டு எழுந்தது. பேசாம அந்த போலி என்கவுண்டர் செய்த உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர், ராஜிந்தர் சிங் மற்றும் மூன்று உளவுத் துறை அதிகாரிகளை என்கவுண்டர் செய்து விட்டால் கேஸ் குளோஸ்.. அவர்களைக் கொன்றதாக இன்னும் ரெண்டு பேரை நீங்களும் சுட்டுத் தள்ளலாம்..


இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், குஜராத் கோர்ட்டில், கூடுதல் குற்றப் பத்திரிகை, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குஜராத்தில் அமைச்சராக இருந்தவரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அமீத் ஷாவின் பெயர், இதில் இடம் பெறவில்லை. உளவுத் துறையில் பணியாற்றிய சில அதிகாரிகளின் பெயர்கள், இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, நேற்று முன்தினம். ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், 'இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, அமீத் ஷாவின் பெயர் இடம் பெற்றிருந்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கும்' என, தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேட்டி, பெரும், சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்., தரப்பில், இதற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தான், அவ்வாறு பேட்டி அளிக்கவில்லை என, ரஞ்சித் சின்ஹா, நேற்று, திடீரென பல்டி அடித்துள்ளார். அவர் கூறியதாவது:




நெருக்கடியும் வரவில்லை:



அமீத் ஷா தொடர்பாக, நான் எதையும் கூறவில்லை. நான் கூறிய சில விஷயங்கள் திரித்து வெளியிடப்பட்டு விட்டன. அமீத் ஷாவுக்கு எதிராக, இந்த வழக்கில், எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான், அவரின் பெயர், இதில் இடம் பெறவில்லை. அமீத் ஷாவை, இந்த வழக்கில் சேர்க்கும்படி, மத்திய அரசிடமிருந்து, சி.பி.ஐ.,க்கு எந்த நெருக்கடியும் வரவில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.




'மத்திய அரசின் அனுமதி தேவை':



மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், ஜி.இ.வாகன்வதி கூறியதாவது: இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில், உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர், ராஜிந்தர் சிங் மற்றும் மூன்று உளவுத் துறை அதிகாரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. உளவுத் துறை அதிகாரிகளை, வழக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com
Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக