திங்கள், 3 பிப்ரவரி, 2014

மது பாதுரி : பெண்களை மனுஷிகளாகவே மதிக்காத கட்சி ஆம் ஆத்மி

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் பெண்களை ஒரு மனுஷியாகக் கூட பார்ப்பதில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அக்கட்சியிலிருந்து விலகியுள்ள மது பாதுரி. இவர் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறுகையில், மனிதாபிமானமே இல்லாத கட்சியாக மாறி விட்டது ஆம் ஆத்மி. பெண்களை, பெண் தலைவர்களை இவர்கள் மதிப்பதில்லை. மனுஷியாகக் கூட பார்ப்பதில்லை. அவர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதுவும் ஒரு வகையில் கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம் போலத்தான். இங்கு பெண்களுக்கு இடம் இல்லை. அப்படியே இருந்தாலும், சுய மரியாதை உள்ளவர்களாக இருந்தால் அவர்களும் கட்சியை விட்டுப் போய் விடுவார்கள் என்றார் அவர். மது பாதுரி, போர்ச்சுகல் நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஆவார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக