வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மியிடம் ஒட்டினார் ! தேர்தலில் போட்டி ! இதற்கு தானே ஆசைப்பட்டாய் உதயகுமாரா !

அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து உதயகுமார் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் கூடன்குளம் திட்டத்தை தொடர்வார்கள், விரிவாக்கம் செய்வார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை தொடர்வது மட்டுமல்லாமல், போராடும் மக்களையே முறியடித்துவிடுவார்கள். எனவே இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது. இவர்களுடைய பலத்தை குறைப்பதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்த வேலையில் எங்களுடைய பகுதி மக்கள், சமுதாய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது புதிதாக வந்துள்ள தமிழகம் மற்றும் இந்தியாவின் உள்ள மக்களுடைய மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிற ஆம் ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்தோம். தமிழகம் சந்தித்த டுபாக்கூர்களில் இதுதான் மிக மோசமான டுபாக்கூர் !இதன் சாயம் இனி விரைவில் வெளுக்கும் 
ஆம் ஆத்மி கட்சியில் சேருவதன் மூலம் மத்தியில் இந்த இரண்டு ஊழல் மிக்க, மதவாதம் மிக்க கட்சிகளை முறியடிக்கலாம் என்று முடிவு எடுத்தோம். அந்த வகையில் எங்களது போராட்டதை முன்னிலைப்படுத்தி, மையப்படுத்தி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
கூடன்குளம் அணுமின் திட்டத்தால் நிச்சயமாக பாதிக்கப்படப்போகிறவர்கள் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள். தேர்தல் நேரத்தில் இந்த திட்டத்தின் பாதகங்கள் பற்றி பரப்புரை செய்வதற்கு வசதிகயாக இருக்கும். அந்த வகையில் இந்த மூன்று தொகுதிகளில் நாங்கள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கிறோம். நான் போட்டியிடுவது பற்றி கட்சிதான் முடிவு செய்யும். அடுத்த வாரம் அறிவிப்பு வரும் என்று நினைக்கிறோம் என்றா nakkheeran.in/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக