வியாழன், 27 பிப்ரவரி, 2014

அடம் பிடிக்கும் சமந்தா!

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களை, பெரும்பாலும் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் பார்க்கலாம். த்ரிஷா, அசின், அனுஷ்கா, காஜல் அகர்வால் என பெரும்பாலும் விஜய் படத்தில் நடித்த உண்மை. துப்பாக்கி, மாற்றான் ஹீரோயின்கள் சூர்யாவுடன் ஜோடி போட்டது திரையுலக வரலாற்றில் கண்கூடாக கண்ட திரைப்படங்களில் விஜய்-சூர்யா காஜல் அகர்வாலுடன் ஜோடி போட்ட பிறகு, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் விஜய்யும், லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சூர்யாவும் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.
சமந்தா மட்டும் என்ன சாதரண நடிகையா? தமிழில் இரண்டு படம், தெலுங்கில் ஐந்து படம் என இந்த ஆண்டு முழுவதும் பிஸி கால்ஷீட்டுக்கிடையில் தான் நாட்களைக் கடத்தப் போகிறார் என்கிறது கோடம்பாக்கம்.

அப்படிப்பட்ட சமந்தாவிற்கு வந்த ஆசை நிறைவேறுமோ நிறைவேறாதோ என்ற நிலையில் இருக்கிறது. கோலிவுட்டின் மூன்று முன்னணி நடிகர்களில் இருவருடன் ஜோடியாக நடித்துவிட்டதால், அந்த ஒருவரை மட்டும் ஏன் விட்டுவைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது சமந்தாவிற்கு.



 தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் நடித்துவிட்ட பெருமைக்குரிய சமந்தாவிற்கு இந்த ஆசை ஏற்பட்டதில் தவறொன்ருமில்லை. அஜித்துடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்த சம்ந்தாவிற்கு ’அஜித்தின் அடுத்த படம் கௌதமுடன்’ என்ற செய்தி தெரியவர ஒரே மகிழ்ச்சியாம்.

சமந்தாவை தெலுங்கில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவைத்தவரும், நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் இரு மொழிகளிலும் நடிக்கவைத்தவரும் கௌதம் என்பதால் அஜித்துடன் ஜோடி சேர எந்த பிரச்சனையும் இருக்காது என்ற எண்ணத்துடன் கௌதமை அணுகிய சமந்தாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தால் தான் கௌதம் படத்தில் இடம் என்பதும், கௌதம் படத்தில் நடித்த ஹீரோக்களை விட ஹீரோயின்களே இன்றுவரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதும் சொல்லித்தெரியவேண்டியதில்லை.


 அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்கா பேசப்பட்டு வந்தாலும், முக முதிர்ச்சி உட்பட சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதாலும், சமந்தா விடாமல் முழு மூச்சுடனும் முயற்சி செய்வதாலும் என்ன நடக்கும் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கௌதம் தரப்பிலிருந்து வெளியாகும் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக