வியாழன், 13 பிப்ரவரி, 2014

உறுதியாகிறது திமுக- காங். கூட்டணி: சோனியாவுடன் கனிமொழி திடீர் சந்திப்பு!! ஸ்டாலின் ???


டெல்லி: லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக சோனியா காந்தியை கனிமொழி திடீரென சந்தித்து பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி இல்லை என்று கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் அறிவித்தனர். ஆனால் திமுகவில் மு.க. அழகிரி, தயாநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காக முயற்சிகளை மும்முரமாக்கினர். இதனால் திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து பேசினார். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: ஸ்டாலின் அப்போதும்கூட காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்திருந்தார்.  ராகுல் -திருமா சந்திப்பு இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை திமுகவின் கூட்டணி தூதராக செயல்பட்டு வரும் திருமாவளவன் சந்தித்து பேசினார். ஒரு மணிநேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. திமுக- காங். கூட்டணியை ஏற்பார்கள்.. இந்த சந்திப்புக்குப் பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் மக்கள் ஏற்பார்கள் என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்து பேசிவருகிறார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது. வீரப்ப மொய்லி அல்லது அந்தோணி சென்னை வருகை? இதனிடையே வீரப்ப மொய்லி அல்லது ஏ.கே. அந்தோணி சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின. சோனியாவுடன் கனிமொழி சந்திப்பு இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி திடீரென சந்தித்து பேசியிருப்பது திமுக- காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கனிமொழி டெல்லி சென்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற கனிமொழி, டெல்லியில் சோனியாகாந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். திமுக- காங். கூட்டணி உறுதியாகிறது இந்த சந்திப்பின் போது ஸ்பெக்ட்ரம் வழக்கில் புதிதாக வெளியாக தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக