புதன், 12 பிப்ரவரி, 2014

சிக்கிட்டாரா.. தமிழக அரசியலை கலக்கும் மற்றொரு டேப்! அட ராமா ராமா

  சென்னை: தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் 'ரகசிய வாழ்க்கையை" மையமாக வைத்து மற்றொரு டேப் விவகாரம் வெடித்துள்ளது. அரசியல்வாதிகள் என்றாலே அவர்களுக்கு தொகுதி பிரச்சனை, தொண்டர்கள் பிரச்சனை, குண்டர்கள் பிரச்சனை, எதிரிகள் பிரச்சனை, துரோகிகள் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்களாக இருந்து வருகின்றனர். இதனால் தான் பல்வேறு அரசியல் அரசியல் தலைவர்கள் இரு திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரு திருமண பட்டியலில் "மூத்த தலைவர்" ஒருவர் இணைந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல்வேறு "கலவரமான" டென்சன்களுடன் எப்போதும் ஒரு தலைவர் வலம் வந்து கொண்டே இருப்பார். ஆனாலும் டென்சனை தணித்துக் கொள்ள அவருக்கு "தனிமை" வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது போல். அந்த மூத்த தலைவரது நக்கல், நையாண்டி, பேசும் விதம், ஆழமான கருத்து, இரண்டு அர்த்த வார்த்தை விளையாட்டு என பன்முக தன்மையை பார்த்து மனம் சொக்கிப் போன ஒருவர் தனது மனதையே அவரிடம் கொடுத்துவிட்டாரம்.
இதை அழகாக ஒரு தரப்பு டேப்பும் செய்துவிட்டதாம். இந்த டேப் தகவலை முதுபெரும் தலைவர் ஒருவர் அந்த கட்சியின் மற்றொரு மூத்த தலைவரிடம் சொல்லப் போய் ஆடிவிட்டார்களாம். இந்த விவகாரத்தை வைத்தே அப்போது அந்த மூத்த தலைவரை வலையில் விழவைத்தார்களாம். தற்போதும் இந்த டேப்பை வைத்து கூட்டணியை உருவாக்கலாமா அல்லது உடைக்கலாலமா என டேப் தரப்பு யோசிக்கிறதாம்!! மாங்காய் புளித்ததோ தேங்காய் புளித்ததோ ?
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக