திங்கள், 24 பிப்ரவரி, 2014

இளையராஜா : வழித்தவறி போகாத இயக்குனர் மகேந்திரன், பாலுமகேந்திரா ...

தமிழ்த்திரையுலக வரலாற்றில் தவிர்க்கமுடியாத இயக்குனர்களில் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர். முல்லும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படைப்புகள் தமிழ்சினிமாவில் நீங்கா இடம்பெற்றவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டு இவர் இயக்கிய சாசனம் திரைப்படம் வெளியானது. அதன்பிறகு எந்த படமும் இயக்காமல் இருந்த இயக்குனர் மகேந்திரன் தற்போது இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கிறார். மகேந்திரன், இளையராஜா இணையும் திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(24.02.14) காலை நடைபெற்றது.
இளையராஜா பேசியபோது “ இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவினால் தான் இந்த சந்திப்பு தாமதமானது. சிறந்த படைப்பாளிகளாக திகழ்ந்த இயக்குனர்களில் பலர், தங்கள் படைப்புகளில் சமரசங்கள் செய்துகொண்டு வழித்தவறி போய்விட்டனர். நான் சொல்வது தனிப்பட்ட முறையில் அல்ல. சினிமா படைப்புகளை பொருத்தவரை அவர்கள் புகழ், மார்கெட் என பலவும் ஏறியிருக்கலாம். ஆனால், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் வழித்தவறாமல் சிறந்த படைப்புகளை கொடுத்தவர் பாலுமகேந்திரா. அந்த வகையில் இயக்குனர் மகேந்திரனும் இதுவரை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளார். மகேந்திரன் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் இந்த படத்தில் பணிபுரிய நான் ஒப்புக்கொண்டேன்” என்று கூறினார்.cinema.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக