வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

குற்றங்கள் நிகழாத நாடோ, ஊரோ கிடையாது!': தே.மு.தி.க., புகாருக்கு முதல்வர் பதில் ! போர் என்றால் பொதுமக்களும் சாகத்தான் நேரிடும்.. சரித்திர வாக்குகள்...


சென்னை: ''தமிழகத்தில், கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது,'' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், குற்றம் சாட்டினார். அதற்கு, முதல்வர் ஜெயலலிதா, ''குற்றங்கள் நிகழாத, நாடோ, ஊரோ கிடையாது,'' என்றார்.
பட்ஜெட் மீது, சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவரான, தே.மு.தி.க.,வை சேர்ந்த மோகன்ராஜ் பேசினார். அவ்வப்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறுக்கிட்டு, பதில் அளித்தனர்.
விவாத விவரம்: மோகன்ராஜ்: சொத்து வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும். தமிழகத்தில், கொலை, கொள்ளை, போன்றவை அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கை, முறையாக பராமரிக்க வேண்டும்.


அமைச்சர் பன்னீர்செல்வம்: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன என்பதை, முதல்வர் புள்ளி விவரத்துடன், சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

மோகன்ராஜ்: நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. நடக்கும் சம்பவங்களை தெரிவிக்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 கொலைகள் நடந்துள்ளன; இதில் அரசியல் கொலைகள், 16.

முதல்வர் ஜெயலலிதா: குற்றங்களே நடக்காத நாடோ, ஊரோ கிடையாது. குற்றங்களின் விகிதம், ஒரு லட்சம் பேருக்கு, எத்தனை என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு தெரிவித்த, புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில், குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றங்கள் நடந்து, நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால், அதை ஆதாரத்துடன் தெரிவியுங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக