புதன், 19 பிப்ரவரி, 2014

தங்கம் பயன்பாட்டில் இந்தியாவை விஞ்சியது சீனா


மும்பை: 'சென்ற, 2013ம் ஆண்டில், தங்கம் பயன்பாட்டில், முதன்முறையாக, இந்தியாவை விஞ்சி, சீனா சாதனை படைத்துள்ளது' என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு ஆண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 2012ம் ஆண்டை காட்டிலும், 13 சதவீதம் அதிகரித்து, 864 டன்னிலிருந்து, 975 டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சீனாவில், இதன் பயன்பாடு, 1,065.8 டன்னாக அதிகரித்துள்ளது. 2012ல், சீனாவில் ஒட்டு மொத்த தங்கத்திற்கான தேவை, 806.8 டன் என்ற அளவிலேயே இருந்தது. நாட்டின், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தங்க பதக்கங்கள் மற்றும் தங்க காசுகள் இறக்குமதிக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.ன் மீது ஆசை அதிகம்தான். அதனால்தான், தங்கத்தின் பயன்பாடும் அங்கு அதிகம். இந்தியாவை விட சீனாவின் ஜனத்தொகை அதிகம்  இதில் வியப்படைய எதுவும் கிடையாது. தங்கத்தின் மீது (உலக) மக்களுக்கு எப்போது மோகம் குறைகிறதோ அப்போதுதான் உலகின்  பொருளாதாரம் சீரடையும்

இந்நிலையிலும், 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, சென்ற ஆண்டில், உள்நாட்டில் தங்கம் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. சென்ற, 2013ல், இந்தியாவில், ஒட்டுமொத்த ஆபரணங்களுக்கான தேவை, 11 சதவீதம் அதிகரித்து, 612.7 டன் என்ற அளவில் உள்ளது. இதன் மதிப்பு, 1,61,750 கோடி ரூபாயாகும். இது, கடந்த 2012ம் ஆண்டில் முறையே, 552 டன் மற்றும் 1,58,359 கோடி ரூபாயாக இருந்தது.

இது குறித்து, உலக தங்க கவுன்சில் இந்திய நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் கூறியதாவது: தங்கத்தில் முதலீடு மேற்கொள்வதை, சீனா ஊக்குவித்து வருகிறது. அதே வேளையில், இந்தியா இதன் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, நடப்பாண்டிலும், இதே நிலை தான் தொடரும். நடப்பாண்டில், சீனாவில், தங்கம் பயன்பாடு, 1,000 - 1,100 டன் என்ற அளவிலும், இந்தியாவில் இதன் பயன்பாடு, 900 - 1,000 டன் என்ற அளவிலும் இருக்கும். இவ்வாறு, சோமசுந்தரம் கூறினார் தினமலர்.கொம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக