வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மீண்டும் கோர்ட்டாரின் குட்டு. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு போட்ட தடை ரத்து


சென்னை : மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்திற்கு பொதுமக்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காக நீதிபதிகள் அனுமதி வழங்குவதாக கூறினர்.சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை எளிதாக லாரிகளில் கொண்டு செல்லும் வகையிலும் மதுரவாயல் - துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2008ம் ஆண்டு இந்த திட்டம் ரூ.1800 கோடியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, கடந்த 2012ம் ஆண்டு  இந்த திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.இந்த தடையை நீக்கக்கோரி, தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு வரவில்லை. இதனால் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘பல கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட பறக்கும் சாலை திட்டம் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுதான் காரணம்.
இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்ÕÕ என்றார்.

கடந்த  ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தலைமை நீதிபதி அகர்வால், சத்தியநாராயணன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், வக்கீல் ராஜகோபால் ஆஜராகி, அட்வகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் வேண்டும் என்று வாய்தா கேட்டார். இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், எதிர்ப்பு தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை தள்ளிவைத்தனர்.இதன்பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பாக அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்திஆஜராகி, ‘‘ இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் வாதாட உள்ளார். பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார். அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன், ‘இதுவரை தமிழக அரசு 35 முறை வாய்தா வாங்கியுள்ளது என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், ‘Ôஇந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இதை வேறு நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்பி வைக்கிறோம்ÕÕ என்றனர்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் முன் கடந்த மாதம்  இறுதி   விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்ப¤ல் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டார். இதைகேட்ட நீதிபதிகள், ‘அரசு தொடர்ந்து வாய்தா கேட்பதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்கை 5வது டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு வக்கீல், தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார் என்று தெரிகிறது. இது எப்படி கேட்க முடியும். இது தவறானது. எனவே வழக்கை தள்ளிவைக்கிறோம். விசாரணைக்கு வரும்போது  அரசு பதில் அளிக்க வேண்டும்ÕÕ என்றனர். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை கடந்த வாரம் தள்ளிவைத்தனர். அதன்படி இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் முன் இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய நெடுங்சாலைத்துறை சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ரூ.1800 கோடி செலவில் திட்டமிடப்பட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு திடீரென்று தடை விதித்தது தவறானது, இதனால் திட்ட பணிகள் கடந்த 2 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கூவத்தின் நடுவில் தூண்கள் அமைத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கூவத்தில் மழை வெள்ளம் செல்லாது, தடைபடும். இது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூறுவது தவறானது. பணிகள் முடிந்ததும் அனைத்து கூவத்தில் வெள்ளம் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம், எனவே திட்டத்திற்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு நல்ல திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும், மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு விரைவாக செல்ல முடியும். 19 கிலோ மீட்டர் தூரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முடிந்து விட்டது. 924 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. எனவே தடையை நீக்க திட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கில்  நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் நேற்று  தீர்ப்பு அளித்தனர். அதன்விவரம்மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை தடை விதித்தது தவறானது என்று தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். மதுரவாயல் வழியாக துறைமுகத்துக்கு செல்லும் லாரிகள், சரக்குகளை எடுத்துக்கொண்டு எளிதாக செல்லலாம். பாலம் அமைக்கப்படுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேறும். இந்த நல்ல திட்டத்துக்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது. கூவம் வழியாக பாலங்கள் அமைத்தால் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசு கூறியது தவறானது என்று மத்திய அரசு தரப்பின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் கூறியதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறோம்.

எனவே, கூவத்தின் வழியாக பாலம் அமைக்கக்கூடாது என்று தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த திட்டத்தை அமல்படுத்தலாம். கூவத்தின் வழியாக பறக்கும் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைக்கலாம். கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்யலாம்.மதுரவாயல்-துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைப்பதற்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய திட்டம். இதை பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து வேண்டுமென்றே பாலம் கட்ட தடை விதித்துள்ளது. மத்திய அரசு தரப்பில் கூறப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம. எனவே, பறக்கும் சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து செய்யலாம். மதுரவாயல் பறக்கும் காலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை ரத்து செய்கிறோம். பறக்கும் சாலை அமைக்க அனுமதி வழங்குகிறோம்.

தமிழக அரசின் ஒரே கோரிக்கை என்ன வென்றால் கூவத்தின் நடுவில் தூண்கள் அமைத்தால் மழை காலத்தில் வெள்ளம் சீராக செல்ல முடியாது, தடை படும் இதனால் வெள்ள பெருக்கும் ஏற்படும் என்பது தான். இதை தூண்கள் அமைத்ததும் சரி செய்து விடுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. எனவே திட்டத்திற்கு அனுமதி வழங்குகிறோம். போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால் தொழிற்சாலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசுக்கு வருவாய் பெருகும். வர்த்தகம் வளரும். தொழில் பெருகும். வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி பணிகளுக்கு அதிகரிக்கும். மதுரவாயலில் இருந்து துறைமுகத்திற்கு எளிதாக விரைவாக செல்ல முடியும். பறக்கும் சாலை வழியாக லாரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு நேராக துறை முகம் செல்ல முடியும்.

சென்னை நகரின் நடுவில் மதுரவாயல் உள்ளதால் தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த திட்டத்தினால் இந்த நேரிசல் குறைந்து விடும். வெளிநாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை துறைமுகத்திற்கு எளிதில் எடுத்து செல்லலாம். இந்த நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றுமதி, இறக்கு மதி செய்து கொண்டு செல்ல எளிதாக இருக்கும். லாரிகளினால் ஏற்படும் மாசுகள் குறைக்கப்படும். மதுரவாயில் இருந்து துறைமுகத்திற்கு செல்ல கூடிய நேரம் குறைந்துவிடும். எனவே இது மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்அளிக்கும் திட்டமாகும். எனவே இதற்கு அனுமதி வழங்குகிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.


என்னென்ன பலன்கள்?
மதுரவாயல் திட்டத்தால் பலன்கள் குறித்து நீதிபதிகள் கூறியதாவது:
* இந்தியாவில் சரக்குகளை கையாளும் துறைமுகங்களில் சென்னை துறைமுகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
* துறைமுகத்திற்கு சரக்குகளை எடுத்து செல்வதில் அதிகம் சிரமம் ஏற்படுகிறது. இது தவிரிக்கப்படும்.
* சரக்குகளை மதுரவாயலில் இருந்து துறைமுகத்திற்கு எடுத்து செல்ல 60 கிலோ மீட்டர் தூரம் ஆகிறது. இது 19 கிலோ மீட்டர் தூரமாக குறைக்கப்படும்.
* தற்போதைய நிலையில் துறைமுகத்திற்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது . இது இனிமேல்  15 முதல் 20 நிமிடத்தில் செல்லமுடியும். அதிக விபத்து நடப்பது தவிர்க்கப்படும். 
* கூவம் ஓரம் குடியிருக்கும் 7400 குடும்பங்களுக்கு மறு வாழ்வுக்கும், மாற்று இடம் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* எரிபொருள் மிச்சமாகும். இந்திய, 1800 கோடி ரூபாய் செலவிடப்படஉள்ளது. இதனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும்.
* தற்போது குறிப்பிட்ட நேரம் செல்ல தான் லாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் 24 மணி நேரமும் லாரிகள் எளிதில் செல்லலாம். மாசு அசுத்தப்படுவது குறைக்கப்படும். மருத்துவமனைகளுக்கு விரைவாக செல்லலாம்.
* கூவம் ஓரம் குடியிருக்கும் 7400 குடும்பங்களுக்கு மறு வாழ்வுக்கும், மாற்று இடம் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக